Published:Updated:

தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் என்றால் என்ன? விவசாயிகளுக்கு என்ன பயன்? #DoubtOfCommonMan

விவசாயம்

விவசாயிகளின் வருமானத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழக அரசு, ஒப்பந்த சாகுபடி சட்டம் ஒன்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வரவிருக்கிறது. இந்தச் சட்டத்தில் அப்படி என்ன இருக்கிறது?

Published:Updated:

தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் என்றால் என்ன? விவசாயிகளுக்கு என்ன பயன்? #DoubtOfCommonMan

விவசாயிகளின் வருமானத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழக அரசு, ஒப்பந்த சாகுபடி சட்டம் ஒன்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வரவிருக்கிறது. இந்தச் சட்டத்தில் அப்படி என்ன இருக்கிறது?

விவசாயம்

விவசாயிகளை வாழ வைப்பதும் வீழ வைப்பதும் விளைபொருள்களின் விலைதான். கடன் வாங்கி பயிர் செய்த விளைபொருள்கள் பல நேரங்களில் குறைந்த விலைக்கு விற்பனையாகின்றன. இதனால் வேதனையில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். நெல், கரும்பு போன்ற விளைபொருள்களுக்குக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற விளைபொருள்கள் சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் ஒப்பந்த சாகுபடிக்குத் தனிச்சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ளது. `தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப்பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம்- 2019' என்ற சட்டத்துக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் சுந்தரேசன் என்ற வாசகர், ``தமிழக அரசு கொண்டுவந்துள்ள ஒப்பந்த சாகுபடி சட்டம் என்ன சொல்கிறது?" என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
Agriculture
Agriculture
விளைபொருள்களுக்கான ஒப்பந்த சாகுபடி சட்டம், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழகம்தான் இந்தச் சட்டத்தை இயற்றும் முதல் மாநிலம்.
Doubt of a common man
Doubt of a common man

விளைபொருள்களுக்கான ஒப்பந்த சாகுபடி சட்டம், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழகம்தான் இந்தச் சட்டத்தை இயற்றும் முதல் மாநிலம். கரும்பு, மூலிகைப் பயிர்கள், இறைச்சிக்கோழி போன்றவற்றை இந்த ஒப்பந்த சாகுபடி சட்டத்தின் கீழ் ஒப்பந்தம் செய்யலாம். உண்மையில் இந்தச் சட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தால் பண்ணையாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

கோழி
கோழி

தமிழகத்தில் இறைச்சிக்கோழி பண்ணைகள் பெரும்பாலும் ஒப்பந்த பண்ணையம் முறையில்தான் செயல்படுகின்றன. இறைச்சிக் கோழி கொள்முதலாளர்கள், பண்ணையாளர்களிடம் ஒப்பந்தம் செய்வார்கள். அதன்படி கோழிக் குஞ்சுகள், தீவனம், மருந்து அனைத்தையும் நிறுவனத்தினர் கொடுத்துவிடுவார்கள். 60 நாள்கள் வளர்ந்த பிறகு கோழிகளை எடை போட்டு வாங்கிக்கொள்வார்கள். விற்பனைக்காகப் பண்ணையாளர்கள் அலையத் தேவையில்லை. ஒப்பந்தம் செய்த நிறுவனத்தைத் தவிர வேறு யாருக்கும் கோழிகளை விற்பனை செய்ய முடியாது. விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், இந்த ஒப்பந்தம் பெரும்பாலும் வியாபாரிகளுக்குச் சாதகமாகவே உள்ளது. கோழிகளின் கொள்முதல் விலையை ஆரம்பத்திலேயே நிர்ணயம் செய்யமாட்டார்கள். ஒருவேளை நிர்ணயம் செய்தாலும் விலை வீழ்ச்சி இருந்தால், அதற்கேற்ப குறைத்துக்கொள்வார்கள். ஆக, தற்போதுள்ள ஒப்பந்த பண்ணையங்கள் வியாபாரிகளுக்குச் சாதகமாகவே செயல்படுகின்றன. இதில் பண்ணையாளர்கள், விவசாயி பாதிக்கப்படும்போது, நிவாரணம் கேட்டு எங்கும் போகமுடியாது.

Doubt of a common man
Doubt of a common man
ஈமு
ஈமு

ஈமுக்கோழி பண்ணைகள் ஒப்பந்த முறையில் செயல்படுத்தப்பட்டன. ஆனால், பண்ணையாளர்களிடம் கோழிகளைக் கொடுத்துவிட்டுக் கொள்முதல் செய்ய மறுத்துவிட்டன பல நிறுவனங்கள். அதனால் நஷ்டத்தை அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். அகர் மர சாகுபடி, செம்மர சாகுபடி, சந்தன மர சாகுபடி, சவுக்கு, தைல மர சாகுபடியெனப் பல ஒப்பந்த சாகுபடி முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் கொள்முதலாளர்களுக்கு ஆதரவாக, அவர்களால் உருவாக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கின்றன. இதில் பாதிக்கப்படும்போது, விவசாயிகள் நியாயம் கேட்டு யாரிடம் செல்வது எனத் தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். இது போன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில்தான் ஒப்பந்த சாகுபடி சட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

Doubt of a common man
Doubt of a common man
விவசாயம்
விவசாயம்
Pixabay

இதனால் ஒப்பந்த தேதியில் நிர்ணயம் செய்யப்படும் விலை அறுவடைக்குப் பிறகு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இதற்கு முன்பு, அறுவடை நேரத்தில் விலை கிடைக்கிறதோ இல்லையோ என ஒரு பதற்றமும் அச்சமும் இருக்கும். இனி அது இருக்காது. அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் விலை உறுதிசெய்யப்பட்டு விடுவதால் பண்ணையாளர்களும் நிம்மதியாகச் சாகுபடி செய்யலாம். கொள்முதலாளர்கள் ஒப்பந்தத்தை மீறும்போது, உற்பத்தியாளர்களுக்கான தொகையைப் பெற்றுத்தரும் வகையில், அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் இந்தச் சட்டத்தில் உள்ளன.

ஒப்பந்த சாகுபடி சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. தற்போதைய நிலையில் விவசாயிகளுக்கு, பண்ணையாளர்களுக்குப் பாதுகாப்பானதாகவே இருக்கிறது இந்தச் சட்டம். விதிமுறைகள் வகுக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தபிறகுதான் இதன் முழுமையான சாதக பாதகம் தெரிய வரும்.

Doubt of a common man
Doubt of a common man

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!