Published:Updated:

நாட்டு மீன்களை வளர்த்து அதிக லாபம் பெறலாம்... அழைக்கும் மீன் வளத்துறை!

மீன் வளர்ப்பு
News
மீன் வளர்ப்பு ( மாதிரி படம் )

நாட்டின மீன் வகைகளை காப்பாற்றவும், மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த மீன்களை வழங்கவும் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் நாட்டின மீனக்குஞ்சுகளை இருப்புச் செய்து, பாதுகாப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்..

Published:Updated:

நாட்டு மீன்களை வளர்த்து அதிக லாபம் பெறலாம்... அழைக்கும் மீன் வளத்துறை!

நாட்டின மீன் வகைகளை காப்பாற்றவும், மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த மீன்களை வழங்கவும் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் நாட்டின மீனக்குஞ்சுகளை இருப்புச் செய்து, பாதுகாப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்..

மீன் வளர்ப்பு
News
மீன் வளர்ப்பு ( மாதிரி படம் )

மீன் வளர்ப்பு விவசாயிகளிடையே நல்ல வருமானம் கொடுக்கும் தொழிலாக வளர்ந்து வருகிறது. காரணம், புதிதான, அன்றே பிடித்து விற்பனை செய்யும் மீன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதில் கட்லா, ராகு, மிர்கால் உள்ளிட்ட மீன் இனங்கள் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால், நம் நாட்டின மீன்களையும் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள் மக்கள். அந்த வகையில் மீன் மற்றும் மீன் வளத்துறை நாட்டின மீன்களை வளர்ப்பவர்களுக்கு உதவும் வகையில் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

மேட்டூர் அணை
மேட்டூர் அணை

நாட்டின மீன் வகைகளை காப்பாற்றவும், மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த மீன்களை வழங்கவும் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் நாட்டின மீனக்குஞ்சுகளை இருப்புச் செய்திட 2022-23ம் ஆண்டிற்குத் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம்,(NFDB) ரூபாய் 1.24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்திலுள்ள 17 ஆற்றுப்படுகைகளில் நாட்டின மீன் குஞ்சுகளை இருப்புச் செய்து தமிழ்நாடு அரசு நீர் வாழ் உயிரினங்களின் சமநிலையை பாதுகாக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்திலுள்ள 17 ஆற்றுப்படுகைகளில் காவேரி ஆற்றுப்படுகை பெரிய வகை ஆற்றுப்படுகையாகவும், 13 ஆற்றுப்படுகைகள் நடுத்தர வகை ஆற்றுப்படுகையாகவும், 3 ஆற்றுப்படுகை சிறிய வகை ஆற்றுப்படுகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆற்றுப் படுகைகள் மூலம் நாட்டின மீனக்குஞ்சுகளை இருப்பு செய்து மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்து விடாமல் பாதுகாப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.

நாட்டின மீன் குஞ்சுகள்
நாட்டின மீன் குஞ்சுகள்

மீன் குஞ்சு இருப்புச் செய்திட தேர்வு செய்யபட்டுள்ள ஆறுகள் : மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேட்டூர் அணை, பவானிசாகர், தஞ்சாவூர், மணிமுத்தாறு மற்றும் நீலகிரி ஆகிய அரசு மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்களில் நாட்டின மீன் வகைகளான சேல் கெண்டை, கல்பாசு, இந்திய பெருங்கெண்டைகள், சாதா கெண்டை முதலிய மீனக்குஞ்சுகளை உறப்பத்தி செய்திடும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீன் வளர்ப்போர் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் ஆற்றோரங்களில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவை உற்பத்தி செய்யப்பட்டு மீன் வளத்துறை மூலம் மீன் உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் ஆறுகளின் விவரங்கள் கீழே இடம்பெற்றுள்ளன.

மீன் குஞ்சுகள் விவரம்
மீன் குஞ்சுகள் விவரம்
johnybosco147@gmail.com

மாவட்ட அளவில் மீன் வளத்துறை உதவி இயக்குநரை அணுகினால் மீன் குஞ்சுகள் கிடைக்கும் இடம், பெறும் வழிமுறைகளை கூறுவார்கள்.