46 - வது மாபெரும் சென்னை புத்தகக் காட்சி- 2023 சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பல தரப்பினரும் வாங்கும் வகையிலும், பல துறை மக்களுக்கு உதவும் வகையில் பல நூல்கள் உள்ளன. இதில் அரங்கு எண் எஃப் 1-ல் விகடன் பிரசுரம் அமைந்துள்ளது இந்த அரங்கத்தில் பல துறை சார்ந்த புத்தகங்கள் உள்ளன.
இங்கு அறிவியல் -ஆய்வு தொழில்நுட்பம், ஆன்மிகம், இல்லறம், பொது அறிவு, விவசாயம்-பிராணி வளர்ப்பு, கவிதைகள் கதைகள், இலக்கியம்-இலக்கணம், சமூக- அரசியல் கட்டுரைகள், சரித்திரம், பெண்களுக்காக, மருத்துவம், வாழ்க்கை வரலாறு,பொது, சினிமா நாடகம், சட்டம் போன்ற பல துறைகள் சார்ந்த பல புத்தகங்கள் உள்ளன.

இந்த அரங்கத்தில் விவசாயம் மற்றும் பிராணி வளர்ப்பு சாந்து 23 புத்தகங்கள் உள்ளன. இதில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எழுதிய “உழவுக்கு உண்டு வரலாறு, எந்நாடுடைய இயற்கையே போற்றி” ஆகிய நூல்கள் உள்ளன. இதோடு நம்மாழ்வாரின் வரலாற்றைப் பேசும் 'நான் நம்மாழ்வார் பேசுகிறேன்', இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை, காய்கறி சாகுபடி, பைசா செலவில்லாமல் பசுமை புரட்சி, ஆடு-மாடு வளர்ப்பு, பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள், வாழ்க மரம் வளர்க பணம், பஞ்சகவ்யா, கோழி வளர்ப்பு, விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி, பண்ணைக் கருவிகள், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், ஜீரோ பட்ஜெட், எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள், வயல்வெளிப் பள்ளி, பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள், வரவு பெருகுது செலவு குறையுது, வருமானத்திற்கு வழி சொல்லும் வல்லுநர்கள், லாபம் தரும் வேளாண் வழிகாட்டி ஆகிய புத்தகங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

இவை அனைத்துக்கும் பசுமை விகடன் இதழிலில் தொடர் கட்டுரையாக வெளிவந்து, நூல் வடிவம் பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
இயற்கை விவசாயம் சம்பந்தமான புத்தகங்கள் அதிகமாக இடம்பெற்று `விகடன் பிரசுரம் அரங்கு' முதல் இடத்தில் உள்ளது. அனைவரும் கட்டாயம் ஒருமுறை பார்க்க வேண்டிய அரங்குகள் இவை.
விவசாயம் சம்பந்தமான புத்தகம் வாங்க வந்திருந்த வாசகர் சித்ராவிடம் பேசியபோது, “இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்கள் இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த புத்தகங்கள் நம் விவசாய முறையில் மாற்றம் செய்யும் அளவிற்கு ஆற்றல் உள்ளது. எனவே இளைஞர்கள் அனைவரும் இது போன்ற புத்தகங்களை படிக்க வேண்டும்” என்றார்.

வாசகர் இளங்கோ பேசியபோது, “ நான் ஒரு விவசாயியின் மகன். என் தந்தைக்கு வாசிக்க தெரியாது. அதனால் அவருக்கு வேளாண்மை சார்ந்த புத்தகங்களை நான் வாசித்து காட்டுவேன். அதனால் எனக்கும் வேளாண்மை சார்ந்த புத்தகங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு புத்தகங்களை தேடினேன். அப்போது எனக்கு கிடைத்த புத்தகம் தான் இயற்கை வேளாண்மை. அதிலிருந்து தொடர்ந்து விகடன் பிரசுரத்தின் வேளாண்மை தொடர்பான புத்தகங்களை நான் வாசித்து வருகிறேன்” என்றார் உற்சாகத்துடன்.