Published:Updated:

How to: குறைந்த விலையில் வாடகைக்கு கிடைக்கும் நவீன வேளாண் கருவிகள்; விண்ணப்பிப்பது எப்படி?

இ வாடகை
News
இ வாடகை

நீங்கள் விவசாயம் செய்யவிருக்கிற இடத்தின் வட்டம், மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராமத்தின் பெயர், முகவரி, நிலத்தின் புல எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். உடன் கருவிகள் தேவைப்படும் தேதி, நேரம் ஆகிய விபரங்களைக் குறிப்பிடுவதும் அவசியம்.

Published:Updated:

How to: குறைந்த விலையில் வாடகைக்கு கிடைக்கும் நவீன வேளாண் கருவிகள்; விண்ணப்பிப்பது எப்படி?

நீங்கள் விவசாயம் செய்யவிருக்கிற இடத்தின் வட்டம், மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராமத்தின் பெயர், முகவரி, நிலத்தின் புல எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். உடன் கருவிகள் தேவைப்படும் தேதி, நேரம் ஆகிய விபரங்களைக் குறிப்பிடுவதும் அவசியம்.

இ வாடகை
News
இ வாடகை

விவசாயம் செய்வதற்கான டிராக்டர், நடவு மற்றும் அறுவடை செய்ய உதவும் நவீன வேளாண் கருவிகளை, விவசாயிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடும் தமிழக அரசின் இ-வாடகைத் திட்டம் அறிமுகமாகி ஒரு மாதமாகிறது. அனைத்து விவசாயிகளாலும் நவீன இயந்திரங்களை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த முடியாத நிலையைக் கருத்தில் கொண்டே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் `இ-வாடகை' செயலியின் மூலம் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைத் தொடர்புகொண்டு, தங்களுக்குத் தேவையான வேளாண் கருவிகளின் பெயர்களைப் பதிவு செய்து, வாடகைக்கு எடுக்க முடியும்.

டிராக்டர்
டிராக்டர்

இ-வாடகைத் திட்டத்தில் நவீன இயந்திரங்களை வாடகைக்கு வாங்குவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் `உழவன்' செயலியின் முகப்பு பக்கத்தில் இருக்கிற `வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு' என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இரண்டாவதாக, `வேளாண் பொறியியல் துறை - இயந்திரங்கள் வாடகைக்கு' என்பதைத் தேர்வு செய்து, மூன்றாவதாக `முன்பதிவிற்கு' என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.

இதன்பிறகு திரையில், `வேளாண் இயந்திரங்கள் வாடகை விபரம்' வரும். அதில் உங்களுக்குத் தேவையான கருவிகளைத் தேர்வு செய்து, நீங்கள் விவசாயம் செய்யவிருக்கும் இடத்தின் வட்டம், மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராமத்தின் பெயர், முகவரி, நிலத்தின் புல எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். உடன் கருவிகள் தேவைப்படும் தேதி, நேரம் ஆகிய விபரங்களைக் குறிப்பிடுவதும் அவசியம்.

விவசாயம்
விவசாயம்

இதன்பிறகு கருவி மற்றும் வாடகைக்கு எடுக்கும் கால அளவைப் பொறுத்து கட்டண விவரம் திரையில் தெரியும். அதற்கு சம்மதம் தெரிவித்து முன்பதிவை உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகு, இணையதள வங்கி முறைகள் அல்லது கடன் அட்டை மூலம் வாடகைக் கட்டணத்தைச் செலுத்தி, அதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். வேளாண் கருவிகள் நீங்கள் கேட்ட நாளில், கேட்ட இடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். சிறுபாசனத் திட்டத்துக்கான கருவிகளையும் இ-வாடகை செயலி மூலமாக வாடகை எடுக்கலாம்.

இவைத் தவிர, வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு அரசு மானியமும் வழங்கவிருக்கிறது. 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரம் வாங்க அரசு 10 லட்ச ரூபாய் மானியமும், விவசாயிகளின் பங்களிப்பாக 15 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டிராக்டர்
டிராக்டர்

இத்திட்டத்தில், ஆதி திராடவிடர்களுக்கு 50 சதவீத மானியத்திலும், இதர பிரிவினர்களுக்கு 40 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் நிதியுதவியோடு நடைமுறைப்படுத்தப்படும் இயந்திரங்கள் வாங்குவதற்கான திட்டத்திற்கு agrimachinery.nic.in என்கிற இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

வேளாண்மை பணிகள் தடைபடாமலும் விரைந்தும் பணிகளைச் செய்ய இயந்திரமயமாக்கல் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட நிலையில், இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.