Published:Updated:

How to: மாடித்தோட்ட குரோ பேக் தேர்ந்தெடுப்பது எப்படி? | How to choose grow bag for terrace garden?

Grow Bag
News
Grow Bag

கீரை வளர்ப்புக்கு, காய்கறிகள், பூச்செடிகள் வளர்ப்பதற்கு எனத் தனித் தனியான அளவுகளில் இந்தப் பைகள் கிடைக்கின்றன. எந்தெந்த செடிகளுக்கு எந்த சைஸ் பைகளைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி `ஸ்ரீ கார்டன் நீட்ஸ்' நிறுவனர் ஸ்ரீப்ரியா கணேஷ் கூறுகிறார்.

Published:Updated:

How to: மாடித்தோட்ட குரோ பேக் தேர்ந்தெடுப்பது எப்படி? | How to choose grow bag for terrace garden?

கீரை வளர்ப்புக்கு, காய்கறிகள், பூச்செடிகள் வளர்ப்பதற்கு எனத் தனித் தனியான அளவுகளில் இந்தப் பைகள் கிடைக்கின்றன. எந்தெந்த செடிகளுக்கு எந்த சைஸ் பைகளைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி `ஸ்ரீ கார்டன் நீட்ஸ்' நிறுவனர் ஸ்ரீப்ரியா கணேஷ் கூறுகிறார்.

Grow Bag
News
Grow Bag

மாடித் தோட்டங்களில் செடிகளை வளர்ப்பதற்குத் தற்போது பலரும் பயன்படுத்துவது குரோ பேக் (grow bag) எனப்படும் செடி வளர்ப்பு பைகள்தான். பல்வேறு அளவுகளில் செடிகளுக்கு ஏற்றவாறு இந்தப் பைகள் கிடைப்பதாலும், பயன்படுத்துவதற்கு எளிதாகவும் இருப்பதாலும் பலரும் இதனை பயன்படுத்துகின்றனர். கீரை வளர்ப்புக்கு, காய்கறிகள், பூச்செடிகள் வளர்ப்பதற்கு எனத் தனித் தனியான அளவுகளில் இந்தப் பைகள் கிடைக்கின்றன. ஆனாலும் பலருக்கும் இந்த பைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் சந்தேகம் இருக்கிறது. எந்தெந்த செடிகளுக்கு எப்படி பைகளைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி `ஸ்ரீ கார்டன் நீட்ஸ்' நிறுவனர் ஸ்ரீப்ரியா கணேஷ் கூறுகிறார்.

ஸ்ரீப்ரியா கணேஷ்
ஸ்ரீப்ரியா கணேஷ்

``மாடித் தோட்டத்தில் மண் கலவைக்கு பின் நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது செடிகள் வைக்கும் தொட்டிகள்தான். தற்போது தொட்டிகளுக்கு பதிலாக செடி வளர்க்கும் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை சரியாக நாம் தேர்வு செய்துவிட்டால் போதும்... செடிகளின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இது எடையும் குறைவாக இருப்பதால் பயன்படுத்தவும் எளிதாக இருக்கிறது. எந்தெந்தச் செடிகளுக்கு எப்படி பைகளைத் தேர்வு செய்வது என்பதனைப் பார்க்கலாம்.

1. 9*9 - இந்த அளவுள்ள பேக் துளசி, திருநீற்றுப் பச்சிலை போன்ற மூலிகை வகைகளை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. 9*15 அல்லது 9*18 - இந்த இரண்டு அளவுகள் உள்ள பைகளைக் கீரை வளர்க்கப் பயன்படுத்தலாம். கீரை குறைவான உயரமே வளரும் என்பதால் இது போன்று உயரம் குறைவாக உள்ள பைகளைப் பயன்படுத்துதல் நல்லது. அரைக்கீரை, சிறுகீரை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி என அனைத்திற்கும் இது பயன்படும்.

Grow Bags
Grow Bags

3.12*12 - இந்த அளவில் கிடைக்கும் பைகளில் பூச்செடிகள் வளர்க்கலாம். அனைத்துவிதமான பூச்செடிகளையும் இந்த பேக்கில் வளர்க்கலாம்.

4. 12*15 - இந்த பேக்தான் பலராலும் விரும்பி வாங்கப்படுகிறது. காய்கறிகள் வளர்ப்பிற்கு இந்த பேக் மிக உகந்ததாக இருக்கும். கத்திரி, வெண்டை, செடி காராமணி என காய்கறிகள் வளர்ப்பில் இந்த அளவுள்ள பேக் தான் பயன்படுத்தப்படுகிறது.

5. 15*15 - இந்த பேக் காய்கறி வளர்ப்பிலும், குறுஞ்செடிகள் வளர்ப்பிலும் உதவியாக இருக்கும். காய்கறிகள் என்றால் இந்த பேக்கில் இரண்டு காய்கறிச் செடிகள் கூட வளர்க்கலாம். செம்பருத்தி, அரளி, ஹைபிரிட் லெமன் போன்ற செடிகளை இந்த அளவுள்ள பேக்கில் வளர்க்க வேண்டும்.

6. அடுத்தது மிகப் பெரியது - 18*18 - இந்த அளவில் உள்ள பேக், கொடி வகைகளை வளர்க்க முக்கியமானது. கொடி வகைகளுக்கு வேர் பெரிதாக இருக்கும் என்பதால் இது போன்ற பெரிய அளவில் பேக் வாங்கி வளர்க்க வேண்டும்.

பச்சை, ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் கிடைக்கும் இந்த பேக்குகள் பார்க்கவும் அழகாக இருக்கும்" என்றார்.