Published:Updated:

How to: வீட்டில் கொத்தமல்லி வளர்ப்பது எப்படி? | How to grow coriander leaves at home?

கொத்தமல்லி
News
கொத்தமல்லி

கொத்தமல்லியை வளர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி தெரிந்துகொண்டால், கொத்தமல்லி வளர்ப்பை போன்ற சுலபமான மாடித்தோட்ட செயல்முறை இல்லை. அந்த எளிய முறையை இங்கு பார்க்கலாம்.

Published:Updated:

How to: வீட்டில் கொத்தமல்லி வளர்ப்பது எப்படி? | How to grow coriander leaves at home?

கொத்தமல்லியை வளர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி தெரிந்துகொண்டால், கொத்தமல்லி வளர்ப்பை போன்ற சுலபமான மாடித்தோட்ட செயல்முறை இல்லை. அந்த எளிய முறையை இங்கு பார்க்கலாம்.

கொத்தமல்லி
News
கொத்தமல்லி

கொத்தமல்லியை வளர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி தெரிந்துகொண்டால், கொத்தமல்லி வளர்ப்பை போன்ற சுலபமான மாடித்தோட்ட செயல்முறை இல்லை. அந்த எளிய முறையை இங்கு பார்க்கலாம்.

கொத்தமல்லி விதைக்கு, சமையலுக்குப் பயன்படுத்தும் கொத்தமல்லியையே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அவை தரமற்றதாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

கொத்தமல்லி
கொத்தமல்லி
Pixabay

எனவே, சோதனை முறையில் அது தரமானதை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

முதலில் கொத்தமல்லி விதைகளை எடுத்து, இரண்டு இரண்டாக உடைத்துக்கொள்ளவும். ஒரு காட்டன் துணியை எடுத்து, அதில் மண்புழு உரத்தைப் பரப்பி, அதில் கொத்தமல்லி விதைகளைத் தூவிப் பரப்பவும். பின் உரத்தையும், கொத்தமல்லி விதகளையும் கலந்து துணியை முடிச்சிட்டுக் கட்டவும். கவனிக்கவும், ரொம்ப இறுக்கிக் கட்டக்கூடாது.

இந்தத் துணியை, நீரில் மூழ்கவித்து எடுக்கவும். பின்னர் அந்த விதை மூட்டையை நிழலில் வைத்து ஈரம் காயாமல் பார்த்துக் கொள்ளவும். மூன்று நாள்களுக்கு பின் அந்த மூட்டையைப் பிரித்துப் பார்க்கவும். அந்த விதைகளில் முளைப்புத் திறன் இருந்தால், கொத்தமல்லி முளைத்திருக்கும். இப்படி முளைத்திருக்கும் விதைகள் தரமானவை. இவற்றை விதையாகக் கொண்டு நாம் கொத்தமல்லி நடவு செய்யலாம். எப்படி நடவு செய்வது என்பதை பார்க்கலாம்.

கொத்தமல்லி
கொத்தமல்லி
Pixabay

ஸ்டெப் 1:
- கொத்தமல்லி வளர்ப்பதற்கு என்று தொட்டி, குரோ பேக் (grow bag) அல்லது உங்களுக்கு தேவையான அளவில் பழைய வாளி, சட்டி என ஒரு பாத்திரத்தைக்கூட எடுத்துக் கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட அளவு மண் கலவையை நிரப்ப வேண்டும்.

ஸ்டெப் 2:
- மண்கலவை தயாரிப்பதற்கு, 30 சதவிகிதம் தேங்காய் நார்க்கழிவு, 30 சதவிகிதம் எரு, 40 சதவிகிதம் செம்மண் போட்டுப் பரப்பி விடவும். அதன் மேல் கொத்தமல்லி விதையைத் தூவவும். அதற்கு மேல் மீண்டும் கொஞ்சம் மண்கலவைப் போட்டு, விதை தெரியாதபடி மூடவும். ஆனால் ரொம்ப அதிகமாக மண் போட்டுவிடக் கூடாது; இதனால் கொத்தமல்லி முளைப்பதற்குத் தாமதம் ஆகலாம்.

ஸ்டெப் 3:
- அடுத்தது தண்ணீர். தண்ணீரை அப்படியே ஊற்றக் கூடாது. கைகளால் தெளித்துவிட வேண்டும்.

coriander leaves
coriander leaves
Photo: Vikatan / Preethi Karthik

ஸ்டெப் 4:
- தண்ணீர் ஊற்றித் தயாராக உள்ள தொட்டியை அப்படியே வெயிலில் வைத்துவிடக் கூடாது. நிழலில் வைத்து ஈரம் காயாமல் தண்ணீர் தெளித்து விட வேண்டும்.

ஸ்டெப் 5:
- ஒரு வாரத்தில் முளைக்க ஆரம்பித்துவிடும். அதன்பின் சூரிய ஒளியில் வைத்துவிடலாம். 15, 20 நாள்களில் சமையலுக்கு எடுத்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிடும்.