Published:Updated:

How to series: வீட்டிலேயே புதினா செடி வளர்ப்பது எப்படி? | How to grow mint leaves at home?

புதினா | Mint
News
புதினா | Mint ( Photo: Vikatan / Manikandan. N.G )

புதினா செடி வளர்க்க பெரிதாக இடம் தேவையில்லை என்பதால், இடமில்லை என்பவர்கள் கூட சிறிய இடத்தில், வீட்டு ஜன்னல்களில் கூட வைத்து வளர்க்க முடியும். வீட்டு சமையலில் புதினா இலைகளைப் பயன்படுத்திவிட்டு எஞ்சியிருக்கும் தண்டு போதும், புதினா வளர்ப்பை மேற்கொள்ள.

Published:Updated:

How to series: வீட்டிலேயே புதினா செடி வளர்ப்பது எப்படி? | How to grow mint leaves at home?

புதினா செடி வளர்க்க பெரிதாக இடம் தேவையில்லை என்பதால், இடமில்லை என்பவர்கள் கூட சிறிய இடத்தில், வீட்டு ஜன்னல்களில் கூட வைத்து வளர்க்க முடியும். வீட்டு சமையலில் புதினா இலைகளைப் பயன்படுத்திவிட்டு எஞ்சியிருக்கும் தண்டு போதும், புதினா வளர்ப்பை மேற்கொள்ள.

புதினா | Mint
News
புதினா | Mint ( Photo: Vikatan / Manikandan. N.G )

வீட்டில் தோட்டம் வைக்க வேண்டும் என நினைப்பவர்கள், ஆரம்பத்தில் எளிமையாக வளர்க்கக்கூடிய சிறு சிறு செடிகளை வளர்த்துப் பழகினால் தோட்டத்தை பராமரிப்பது சுலபமாக இருக்கும். அதிகமாகச் செலவுகள் எதுவும் இல்லாமல், வீட்டில் புதினா வளர்ப்பை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம். இதற்குப் பெரிதாக இடம் எதுவும் தேவையில்லை என்பதால், இடமில்லை என்பவர்கள் கூட சிறிய இடத்தில், வீட்டு ஜன்னல்களில் கூட வைத்து வளர்க்க முடியும். 15 நாள்களில் அறுவடை செய்து கொள்ளலாம். வீட்டு சமையலில் புதினா இலைகளைப் பயன்படுத்திவிட்டு எஞ்சியிருக்கும் தண்டு போதும், புதினா வளர்ப்பை மேற்கொள்ள.

புதினா
புதினா

ஸ்டெப் 1

தரமான, தடிமனான, குறைந்தபட்சம் இரண்டாகக் கிளைத்திருக்கும் புதினா தண்டை எடுத்துக்கொள்ளவும். அதில் இலைகள் அனைத்தையும் நீக்காமல், மேலே இரண்டு இலைகளை விட்டுவைக்கவும்.

ஸ்டெப் 2


ஒரு கண்ணாடி டம்ளரில், பாதியளவு நீர் எடுத்துக் கொள்ளவும். அதில், நாம் எடுத்து வைத்திருக்கும் புதினா தண்டுகளை வைக்கவும். டம்ளரில் நீரை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். டம்ளரை வெயிலில் வைக்கவே கூடாது.

ஸ்டெப் 3
கண்ணாடி டம்ளரில் வைத்திருக்கும் புதினா தண்டுகள் ஐந்து நாள்களுக்குப் பின் வேர் விட ஆரம்பித்திருக்கும். மேலே இருந்த இரண்டு இலைகளுடன் இன்னும் சில இலைகள் வளர ஆரம்பித்திருக்கும். இப்போது இந்தத் தண்டை எடுத்து மண்ணில் நட வேண்டும். ஏற்கெனவே வேர் விட்டிருக்கும் புதினா தண்டுகளை மண்ணில் ஊன்றும்போது நன்றாக வளர ஆரம்பிக்கும்.

ஸ்டெப் 4
புதினா படர்ந்து வளரக்கூடிய செடி என்பதால் குறுகிய தொட்டிகளிலோ, பைகளிலோ வைக்க வேண்டாம். அகலமான தொட்டிகளில், குரோ பேக்குகளில் வைக்கவும்.

புதினா
புதினா
freepik

தொட்டி/குரோ பேக்கில் மண் கலவையை தேங்காய் நார் கழிவுகள் 30%, மண்புழு உரம் 30%, செம்மண் 40% எனக் கலந்து தயாரிக்க வேண்டும். இப்படி தயாரித்த மண் கலவையில், விரல்களால் குழி பறித்து புதினா தண்டுகளை நட வேண்டும்.

நேரடியாக சூரியஒளிபடும் வகையில் புதினா தண்டு நட்ட தொட்டியை வைக்கக் கூடாது. ஆனால் புதினா செடியின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி தேவைப்படும் என்பதால் அதற்கு ஏற்றார் போன்ற இடத்தில் வைக்க வேண்டும்.

பத்து நாள்களில் புதினா வளர்ந்துவிடும். பின்னர், மேல் இருக்கும் இலைகளை எடுத்துக் கொள்ளலாம். இதனால் கீழிருக்கும் இலைகளுக்கு சூரிய ஒளி கிடைக்கும்.

அடுத்ததாக முள்ளங்கி வளர்ப்பைப் பற்றி பார்க்கலாம்.
புதினாவை போன்றே முள்ளங்கி வளர்ப்பும் மிக சுலபம், எளிதாக வீட்டிலேயே நாம் முள்ளங்கியை அறுவடை செய்யலாம்.

ஸ்டெப் 1
அகலமான தொட்டியில் முள்ளங்கியைப் பயிரிடலாம். தொட்டியில் மண் கலவையை நிரப்பி, அதில் முள்ளங்கி விதையை நடவு செய்யவும். முள்ளங்கி மண்ணுக்கடியில் வளரும் என்பதால், மண் கலவையுடன் வேப்பம் புண்ணாக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 2

ரொம்ப ஆழமாக நடவு செய்யக்கூடாது, அரை இன்ச் ஆழத்தில் நடவு செய்தால் போதுமானது. விதையை நட்டு நீர் தெளித்துவிட்டால் 4 அல்லது 7 நாள்களில் விதை முளைத்து இரண்டு இலை வரும். இதில் பெரிதாக பூச்சி, நோய்த் தாக்குதல் இருக்காது என்பதால் பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை. 45 நாள்களில் முள்ளங்கி சாகுபடி செய்து விடலாம்.

முள்ளங்கி சிறிதளவு மண்ணுக்கு வெளியே தெரியத்தான் செய்யும். பலரும் அதனை மண்கொண்டு மூடுவார்கள், அது தேவையில்லை. முள்ளங்கி பருமனாகாமல் ஒல்லியாக இருக்கிறது, செடி வளராமல் இருக்கும் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க மண்கலவையை சரியாக வைத்துக்கொள்வது நல்லது.