Published:Updated:

How to: வீட்டில் கீரை சாகுபடி செய்வது எப்படி? | How to grow spinach at home?

கீரை
News
கீரை ( Photo: Vikatan / Devarajan )

மாடித் தோட்டத்தில் கீரை வளர்ப்பு எளிதான விஷயம். அதற்குத் தேவையான பொருள்கள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்கிறார், இயற்கை விவசாய ஆர்வலர் `விதை' யோகநாதன். அவை இங்கே...

Published:Updated:

How to: வீட்டில் கீரை சாகுபடி செய்வது எப்படி? | How to grow spinach at home?

மாடித் தோட்டத்தில் கீரை வளர்ப்பு எளிதான விஷயம். அதற்குத் தேவையான பொருள்கள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்கிறார், இயற்கை விவசாய ஆர்வலர் `விதை' யோகநாதன். அவை இங்கே...

கீரை
News
கீரை ( Photo: Vikatan / Devarajan )

தற்போது பலரும் தற்சார்பு வாழ்க்கையைப் பின்பற்றி வருகின்றனர். தற்சார்பு வாழ்க்கையின் முதல் படியாகப் பலரும் முன்னெடுப்பது, மாடித்தோட்டம் மற்றும் இயற்கை விவசாயம். குறிப்பாக, மாடித்தோட்டத்தில் கீரை வளர்ப்பு எளிதான விஷயம். அதற்குத் தேவையான பொருள்கள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்கிறார், இயற்கை விவசாய ஆர்வலர் `விதை' யோகநாதன். அவை இங்கே...

`விதைகள்’ யோகநாதன்
`விதைகள்’ யோகநாதன்

- விதைப்பு, பாசனம், அறுவடை இவை மூன்றும்தான் கீரை சாகுபடிக்கு முக்கியம்.

- கீரை விதைகளை விதைக்கும்போது, அது மிகவும் சிறிய விதைகளாக இருக்கும் என்பதால் மேலோட்டமாகத் தூவிவிட்டால், தண்ணீர் ஊற்றியவுடன் ஒரே பக்கமாக ஒதுங்கிவிடலாம். எனவே, விதைகளை மண்ணுடன் நன்றாகக் கலந்துவிட வேண்டும். தண்ணீர் விட பூவாளியைப் பயன்படுத்துவது சிறந்தது.

- கீரை வளர்ப்பில் தொட்டியில் வைத்து வளர்ப்பது, தரையில் வளர்ப்பது என இரண்டு வகை உள்ளது. இதில் அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, சிவப்பு தண்டுக் கீரை, பச்சை தண்டுக் கீரை, பருப்புக் கீரை, காசினி கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி என இவற்றைத் தொட்டியில் வளர்க்கலாம். புளிச்சக்கீரை, அகத்திக்கீரை போன்றவற்றைத் தரையில் வளர்க்கலாம். முருங்கைக் கீரையை தொட்டியிலும் வளர்க்கலாம், தரையிலும் வளர்க்கலாம். மாடியில் தொட்டியில் வளர்க்க வேண்டும் என்றால் செடி முருங்கையை வளர்க்க வேண்டும்.

கீரை
கீரை

- தோட்டம் போட இடம் இல்லாதவர்கள், தொட்டிக்கு வசதி இல்லாதவர்கள் ஒரு பிளாஸ்டிக் சாக்கை எடுத்து, அதில் பாதி அளவுக்குத் தென்னை நார்க் கழிவு உரத்தை நிரப்பி, அதில் 10 கிராம் கீரை விதையைத் தூவினால் போதும்... 20 நாள்களில் கீரை கிடைத்துவிடும்.

- மணத்தக்காளி கீரையைப் பொறுத்தவரை ஒரு தொட்டியில் ஒரு செடி வைக்கலாம். காரணம், இது நன்றாகப் படர்ந்து வளரக் கூடியது.

- கீரை விதை விதைத்து 15 முதல் 20 நாள்களுக்குள் சாகுபடி செய்துவிடலாம்.

- வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கீரைகளை, சமையலுக்குப் பயன்படுத்த முழுதாகப் பிடுங்க வேண்டாம். பாலக்கீரையை கிள்ளக் கிள்ள, புதர் போன்று வளரும். அரைக்கீரை, சிறுகீரையை அறுக்க அறுக்க வளர்ந்துகொண்டே இருக்கும்.

- கீரைகளுக்குக் கண்டிப்பாக வேப்பஎண்ணெய் தெளிச்சல் பயன்படுத்தக் கூடாது. பதிலாக, வேப்பங்கொட்டையை அரைத்து ஒரு காடா துணியில் கட்டி தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து, அடுத்த நாள் காலையில் இந்தக் கரைசலை செடியில் தெளிக்கவும்.

கீரை
கீரை

அல்லது வேப்பம்புண்ணாக்கை தண்ணீரில் ஊறவைத்து அந்தக் கரைசலையும் பயன்படுத்தலாம். 1 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் புண்ணாக்கு என்ற விகிதத்தில் கலந்து, அது கரைந்த பின் அந்தக் கரைசலை எடுத்து, அதனுடன் 10 மடங்கு தண்ணீர் சேர்த்துக் கலந்து செடிகளுக்குத் தெளிக்கலாம். இதனால் பூச்சித் தொல்லைகள் இருக்காது.

- புண்ணாக்குக் கரைசல் தெளிக்க முடியாதவர்கள், வீட்டில் இருக்கும் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும் அரைத்து தண்ணீரில் கரைத்து, அந்தக் கரைசலை தெளிக்கலாம். இதற்கு, 10 கிராம் பூண்டு, 10 கிராம் இஞ்சி, 10 கிராம் பச்சைமிளகாயை 2 கிராம் மஞ்சள் தூள் கலந்து அரைத்து 5 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.