ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

என்னை விவசாயியாக மாற்றிய பசுமை விகடன்!

பண்ணையில் துர்கா வாசுதேவன்
பிரீமியம் ஸ்டோரி
News
பண்ணையில் துர்கா வாசுதேவன்

அனுபவம்

'மீன் வாங்கிக் கொடுப்பதற்குப் பதில் மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது’ என்பது பிரபலமான சீனப் பழமொழி. அதைத்தான் பசுமை விகடனும் செய்கிறது. விவசாயம் பற்றி விரிவாக எழுதுவதோடு இல்லாமல், விவசாயத்தைக் கற்றுக்கொடுக்கும் வேலையையும் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறது.

அதை என் அனுபவத்தின் மூலமாக உணர்ந்திருக்கிறேன். பசுமை விகடன் கொடுத்த இரண்டு நாள்கள் பயிற்சி என்னை முழுமையான விவசாயியாக மாற்றியிருக்கிறது அதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவே இந்தக் கடிதம்.

‘‘செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள நாங்களத்தூர் கிராமத்தில் இருக்கிறது, எங்கள் பண்ணை. அப்பா ‘டிராவல் ஏஜென்சி’ வைத்திருந்தார். அதுதான் எங்கள் குடும்பத் தொழிலாக இருந்தது. திருமணம் முடிந்தவுடன் நானும் அப்பா தொழிலில் இறங்கிவிட்டேன். அப்பாவுக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். அதற்காக 30 வருடங்களுக்கு முன்பு 7 ஏக்கர் நிலம் வாங்கினார். வாங்கும்போது நிலம் தரிசாகத்தான் இருந்தது. அதை ஒரு பண்ணையாக மாற்ற விரும்பினார். மா, தென்னை மரங்களை நடவு செய்து தோப்பாக உருவாக்கினார். வார இறுதி நாள்களில் அப்பாவுடன் நாங்களும் பண்ணைக்கு வருவோம். 2012-ம் வருஷம் அப்பா இறந்துவிட்டார். அதற்கு ஒரு மாதம் முன்பு வரைக்கும் பண்ணைக்கு வந்துகொண்டு இருந்தார். அப்பாவுக்குப் பிறகு, அந்தப் பண்ணையை விற்பனை செய்ய மனது வரவில்லை. அண்ணனும் நானும் சேர்ந்து பார்த்துக்கொள்ள முடிவு செய்தோம். எங்கள் பண்ணையில் மா, தென்னை, முந்திரி, சப்போட்டா, கொய்யா மரங்கள் இருக்கின்றன. மா, இந்தச் சீஸனில் நன்றாகக் காய்த்திருக்கிறது.

பண்ணையில் துர்கா வாசுதேவன்
பண்ணையில் துர்கா வாசுதேவன்
பண்ணையில்
பண்ணையில்
பண்ணையில்
பண்ணையில்
பண்ணையில்
பண்ணையில்


எங்களுக்கு விவசாயம் பற்றி அதிகமாகத் தெரியாது. 2015-ம் வருடம் பண்ணையில் வேலை ஆரம்பிக்கும்போதுதான் விவசாயம் சார்ந்த தகவல்களைத் தேட ஆரம்பித்தோம். 2015-ம் வருடம் முதல் தேடல்களை அதிகமாக்கினோம். அதில் இயற்கை விவசாயத்தைப் பற்றித் தெரிந்துகொண்ட தகவல்கள் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில்தான் பசுமை விகடனும் நம்மாழ்வாரும் எனக்கு அறிமுகம். பசுமை விகடனில் வந்த பல கட்டுரைகளில் இருக்கும் பண்ணைகளுக்கு நேரடியாகப் போய்ப் பார்க்க ஆரம்பித்தேன். வெறுமனே படித்துவிட்டுக் கடந்து போவதில் எனக்கு விருப்பம் இல்லை. விவசாயத்தில் இறங்கிய பிறகு, ‘டிராவல்’ தொழிலை நிறுத்திவிட்டேன்.

இந்த நிலையில்தான், பசுமை விகடன் மற்றும் அறப்பொருள் வேளாணகம் இணைந்து திருப்பூரில் ஒரு களப்பயிற்சி அளிக்க இருப்ப தாக விளம்பரம் வந்தது. அதைப் பார்த்துவிட்டு நானும் அதில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்துக்கொண்டேன். அந்தப் பயிற்சியில்தான் அதிகமான விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. அறப்பொருள் வேளாணகம் பண்ணையில் பந்தல் சாகுபடி, காய்கறிச் சாகுபடி, நாட்டுக்கோழி, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு எல்லாம் இருந்தது. களப்பயிற்சிக்கு ஏற்றப் பண்ணையாக அதை உருவாக்கி இருந்தார்கள். அந்தப் பண்ணையில் விளையும் காய்கறிகளையும் அங்கு வைத்தே விற்பனையும் செய்கிறார்கள். உற்பத்தி முதல் விற்பனைவரை அங்கு தெரிந்துகொள்ள முடிந்தது.

‘‘ஒவ்வொரு கொத்திலும் கடலைத் திரட்சியாக இருந்தது. அதுவே ஏதோ சாதித்த திருப்தியைக் கொடுத்தது.’’பூச்சிகள்மீது பெரிய மரியாதையே அங்குதான் உருவானது. பூச்சிகள் உணவுச் சங்கிலியில் எந்த அளவுக்கு முக்கியமானவை என அங்குதான் தெரிந்துகொண்டேன். அதேபோல பூச்சிகளை மருந்து அடித்துக் கொல்லாமல், பூச்சிகளை விரட்டப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதையும் அங்கே தான் தெரிந்துகொண்டேன். பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் உள்ளிட்ட இடுபொருள்கள் தயாரிக்கும் முறைகள், மூடாக்கை மட்க வைத்துப் பயன்படுத்தும் முறைகளையும் அங்கு கற்றுக்கொண்டேன். என்னென்ன வகையான பாசனம் இருக்கிறது. எந்தெந்த மண்ணுக்கு எந்தெந்தப் பயிர் வைக்கலாம் எனப் பல தகவல்கள் அங்குதான் கிடைத்தன. அந்த இரண்டு நாள்கள் பயிற்சியில் கற்றுக்கொடுத்தவர்கள், ‘பஞ்சகவ்யா’ நடராஜன் ஐயா, பூச்சி செல்வம், பிரிட்டோ ராஜ், சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசு ஆகியோர். அவர்கள் சார்ந்த துறையில் மிகச் சிறந்த நிபுணர்கள். அதனால் அந்தப் பயிற்சி மிகவும் உபயோகமா இருந்தது. என்னைப் போலவே பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் நன்றாகப் பழகினார்கள். அவர்களிடம் இருந்தும் பல விஷயங்கள் கற்றுக் கொள்ள முடிந்தது. அந்தப் பயிற்சியை மறக்கவே முடியாது. எனக்குள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது அந்தப் பயிற்சிதான். அதற்காகப் பசுமை விகடனுக்கும் அறப் பொருள் வேளாணகத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பண்ணையில்
பண்ணையில்
பண்ணையில்
பண்ணையில்
பண்ணையில்
பண்ணையில்
பண்ணையில் துர்கா வாசுதேவன்
பண்ணையில் துர்கா வாசுதேவன்பயிற்சி முடிந்து வந்ததுமே கற்றுக்கொண்ட அனைத்தையும் செய்து பார்க்கக் களத்தில் இறங்கினேன். முதல் முறை, ஒரு விவசாயியாக சீரகச் சம்பா நெல் விதைத்தேன். ஆரம்பத்தில் பலர் ‘வேண்டாம்... இது வீண் முயற்சி. இயற்கை விவசாயத்தில் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்காது’ என்று சொன்னார்கள். ஆனால், நான் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை. எனக்குத் தெரிந்த இயற்கை விவசாயி மூலமாக விதை நெல்லை வாங்கி விதைத்தேன். பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்து நாற்று விட்டு வயலில் நடவு செய்தேன். நடவு செய்த சிறிது நாளிலேயே விவசாய வேலைக்கு வருபவர்கள், ‘நீங்க வீணா செலவு செய்யுறீங்க’ என்று சொன்னார்கள்.

‘இதை நான் வருமானத்துக்காகப் பயிர் செய்யவில்லை. பயிற்சிக்காகப் பயிர் செய்கிறேன்’ என அவர்களுக்கு விளக்கம் கொடுத்தேன். நெல் விளைந்து அறுவடையானது. எல்லோரும் சொன்னது போலவே விளைச்சல் குறைவாகத்தான் கிடைத்தது. 60 சென்ட் நிலத்தில் மொத்தம் 7 மூட்டை (60 கிலோ மூட்டை) நெல் கிடைத்தது. அதை நானும் ஓரளவு எதிர்பார்த்து இருந்தேன். அதனால் பெரிய ஏமாற்றம் இல்லை. ஆனால், அந்தச் சாகுபடி மூலமாக எனக்குக் கிடைத்த அனுபவங்கள் விலை மதிப்பு இல்லாதது. மகசூலாகக் கிடைத்த நெல்லை அரிசியாக்கிச் சாப்பிடும்போது, சாப்பாடு மிகவும் சுவையாக இருந்தது.

அடுத்த முயற்சியாக எள் பயிர் செய்தேன். அதற்கு அதிகமான தண்ணீர் தேவைப்படவில்லை. தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் எள் விதைக்கலாம் என்பதைக் கற்றுக்கொடுத்ததும் பசுமை விகடன் கொடுத்த அந்தப் பயிற்சிதான். அதில் ஓரளவு நல்ல மகசூல் கிடைத்தது. இதையும் ஒரு நல்ல அனுபவமாக எடுத்துக்கொண்டேன்.

பண்ணையில் துர்கா வாசுதேவன்
பண்ணையில் துர்கா வாசுதேவன்
பண்ணையில்
பண்ணையில்
பண்ணையில்அதன் பிறகு, நிலக்கடலை விதைக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அதனால், இந்த ஆண்டு தைப்பட்டத்தில் நிலக்கடலை விதைத்தேன். அப்போதும் சிலர், ‘ரசாயன உரங்களைப் போடுங்க, நல்ல மகசூல் கிடைக்கும்’ என்று சொன்னார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. நான் இயற்கை இடுபொருள்களை மட்டும்தான் கொடுத்து வந்தேன். மற்ற விவசாயிகள் பயன்படுத்தும் இடுபொருள்கள் அளவைவிடக் கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்தினேன். அரை ஹெக்டேர் (1.25 ஏக்கர்) நிலத்தில்தான் கடலை விதைத்திருந்தேன். 90 நாள்களுக்குப் பிறகு, அறுவடை செய்தோம். 20 மூட்டை மகசூல் கிடைத்தது. ஒரு மூட்டைக்கு 40 கிலோ வீதம், மொத்தம் 800 கிலோ கிடைத்தது (தமிழகத்தின் சராசரி மகசூல் அரை ஹெக்டேருக்கு 700 கிலோ). அறுவடை செய்த வேலையாள்களே ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். ஒவ்வொரு கொத்திலும் கடலைத் திரட்சியாக இருந்தது. அதுவே ஏதோ சாதித்த திருப்தியைக் கொடுத்தது. வேலையாள்களுக்குக் கொடுத்தது போக 14 மூட்டை கிடைத்தது.

இதுவும் கொஞ்சம் குறைவான மகசூல்தான். அதை எண்ணெயாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய நினைத்திருக்கிறேன். மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது இன்னும் அதிகமான வருமானம் கிடைக்கும் என நினைக்கிறேன். இப்போது வீட்டில் குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி கொடுத்து வருகிறேன். அதோடு சேர்ந்து விவசாயமும் பார்க்கிறேன். பசுமை விகடன் பயிற்சி மூலமாக இன்றைக்கு நானும் ஒரு விவசாயியாக மாறி இருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். பசுமை விகடனுக்கு நன்றி!இப்படிக்கு,
துர்கா வாசுதேவன்,
இயற்கை விவசாயி.