மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு: பிரதமரைச் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டு யோசனை!

மரத்தடி மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
News
மரத்தடி மாநாடு

அட புரியுற மாதிரி சொல்லு’’ என்றார் கண்ணம்மா. “அது ஒண்ணுமில்லை கண்ணம்மா. ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில பேசின பிரதமர், ‘பயனற்ற ஆழ்துளைக் கிணற்றை மழைநீர்ச் சேகரிப்பு

ரோனா வைரஸ் பீதியால் முகத்தில் மாஸ்க் கட்டியபடியே சோகத்தோடு நடந்து வந்தார் வாத்தியார் வெள்ளைச்சாமி. காய்கறி கண்ணம்மா தரையில் அமர்ந்து காய்கறிகளைக் கூடையில் அடுக்கிக்கொண்டிருந்தார். அவர் முகத்திலும் மாஸ்க் இருந்தது. அவருக்கு உதவி செய்துகொண்டிருந்தார் ஏரோட்டி ஏகாம்பரம். இருவரையும் பார்த்து மிரண்டுபோனார் ஏரோட்டி ஏகாம்பரம். “என்ன வாத்தியாரே... இந்தம்மா முகத்துல முகமூடி மதிரி ஒண்ணைக் கட்டியிருந்துச்சு. `ஆஸ்பத்திரியில டாக்டருங்க போட்டிருக்கிற மாதிரி இருக்கே...’ன்னு கேட்டேன். ‘அது சும்மா’ன்னு சொல்லிச்சு. அட எதையோ சொல்லுதுனு ஒத்தாசை செஞ்சுக்கிட்டு இருக்கேன். இப்போ பார்த்தா நீங்களும் முகமூடிக்காரன் மாதிரியே வர்றீங்க. என்னய்யா நடக்குது இங்கே...’’ என நடிகர் வடிவேலு மாதிரி டரியலானார். “அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி நான் ஒரு போர் போட்டேன். அதுல தண்ணியே வரலை. அதனால என்ன செய்யறதுன்னு யோசிச்சேன். அந்த நேரத்துல, `தண்ணி வராத போர்வெல்லை மழைநீர்ச் சேமிப்புக் கலனா பயன்படுத்தினா மறுபடியும் தண்ணி கிடைக்கும்’னு நம்ம நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோ ராஜ் அதைப் பற்றி விரிவாகச் சொல்லியிருந்தாரு. அதுல சொல்லியிருந்த மாதிரியே நானும் செஞ்சேன். இப்போ அந்த போர் தண்ணியிலதான் முருங்கை விவசாயம் நடந்துக்கிட்டு இருக்கு. அதைப் பார்த்து பலபேர் பயனடைஞ்சிருக்காங்கனு தெரிஞ்சுது. அப்புறம் அதை அரசாங்க ஆபீஸர்களும் கையிலெடுத்துட்டாங்க. `பார்றா...’னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். திடீர்னு குடியரசு தினத்தன்னிக்கு ரேடியோவுல பேசின பிரதமர் இதைப் பத்திப் பேசுறாருய்யா...’’ வெள்ளந்தியாகச் சொன்னார் ஏகாம்பரம்.

மரத்தடி மாநாடு
மரத்தடி மாநாடு

‘‘அட புரியுற மாதிரி சொல்லு’’ என்றார் கண்ணம்மா. “அது ஒண்ணுமில்லை கண்ணம்மா. ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில பேசின பிரதமர், ‘பயனற்ற ஆழ்துளைக் கிணற்றை மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதிய யோசனை தமிழகத்தில் உதித்துள்ளது. தமிழகத்தில் தோன்றியதுபோல எண்ணற்ற யோசனைகள் புதிய இந்தியாவுக்கு வலுசேர்த்து வருகின்றன’னு பேசினாரு. இந்த எண்ணத்துக்கு அடிப்படை பிரிட்டோ ராஜ் சொன்ன யோசனைதான். அதை ஏப்ரல் 25, 2014-ம் வருஷம் பசுமை விகடன்ல பதிவு பண்ணியிருந்தாங்க. அதுதான் ஊர் ஊராகச் சுத்தி கடைசியா பிரதமர் வரைக்கும் போயிருக்கு. உண்மையிலேயே அந்த யோசனையால பலர் பயனடைஞ்சிருக்காங்க’’ என்று விளக்கினார் வாத்தியார்.

“அட ஆமாய்யா... நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிச்சுக்கிட்டு இருக்குன்னு நானும் பேப்பர்ல படிச்சேன் வாத்தியாரே... எப்படியோ பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் பயனுடைஞ்சா சரிதான். சரிங்கய்யா... நான் போய் யாவாரத்தைப் பார்க்கிறேன்’’ எனக் கூடையை எடுத்துக்கொண்டு கண்ணம்மா நடையைக் கட்ட, முடிவுக்கு வந்தது மாநாடு.

‘நல்மருந்து’ தொடர் இந்த இதழில் இடம்பெறவில்லை.