நாட்டு நடப்பு
Published:Updated:

“பதநீர் குடிக்கும் சமூகமாக மாற்றுவோம்!’’

நிகழ்வில் பேசும் அமைச்சர் மனோ தங்கராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
நிகழ்வில் பேசும் அமைச்சர் மனோ தங்கராஜ்

நாட்டு நடப்பு

கன்னியாகுமரியில் உள்ள புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் கடந்த ஜனவரி 26, 27, 28 ஆகிய நாள்களில்... பாரம்பர்ய உணவு, இயற்கை விவசாயம், பனை, மரபு கலைகள் மற்றும் விளையாட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐம்பெரும் விழா நடைபெற்றது. மீண்டெழும் குமரி அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குப் பசுமை விகடன் ஊடக ஆதரவு வழங்கியது. இதில் விவசாயிகள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கலந்துகொண்டனர். இவ்விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற கண்காட்சியில் பனை சார்ந்த உணவுகள், மீன் உணவுகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பர்ய உணவு வகைகள் இடம்பெற்றன.

நிகழ்வில்
நிகழ்வில்

இவ்விழாவில்... மீண்டெழும் குமரி இயக்கத்தின் தலைவர் தாமஸ் பிராங்கோ, பனைவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், புனித சவேரியார் கத்தோலிக்கப் பொறியியல் கல்லூரி தாளாளர் மரிய வில்லியம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.

கலந்துகொண்டோர்
கலந்துகொண்டோர்

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “கன்னியா குமரி கடலோரப் பகுதிகளில் ஒரு லட்சம் பனைமரங்கள் நடும் திட்டத்தைச் செயல் படுத்தவுள்ளோம். பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலை களின் கரைகளிலும், கடற்கரையோரங்களிலும் பனைமரங்கள் நடப்படும். ‘ஒரு குடும்பம் ஒரு பனைமரம்’ என்ற திட்டம் மூலம் மொத்தம் ஒரு லட்சம் பேர் மூலம் இந்தத் திட்டத்ததைச் செயல்படுத்த உள்ளோம். மீண்டும் இந்தச் சமூகத்தை அக்கானி (பதநீர்) குடிக்கும் சமூகமாக உருவாக்க வேண்டும். இம்மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், நறுமணப் பொருள்களை உற்பத்தி வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

கண்காட்சியில்
கண்காட்சியில்

இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக என்னுடைய தொகுதியில் ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக்கை ஒழிக்கும் முயற்சியிலும் தற்போது இறங்கியிருக்கிறோம். குப்பையில்லா குமரி என்ற முழக்கத்தை முன்வைத்து இதை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்” எனத் தெரிவித்தார்.