Published:Updated:

பொன்னேர் பூட்டுதல் என்றால் என்ன தெரியுமா? | My Vikatan

பொன்னேர் உழவு
News
பொன்னேர் உழவு

பொன்னேர் உழுதல் என்றால் நல்ல நாள் பார்த்து முதன் முதலாக ஏர் பிடித்து உழவு செய்யும் முறையாகும். சித்திரை மாதத்தில் செய்யும் உழவை கோடை உழவு, புழுதி உழவு என்று சொல்வார்கள். அப்போது அவர்கள் ஏரை வாழ்த்தி விவசாயம் நன்கு செழிக்க பாடும் பாட்டை ஏர்மங்கலம் என்பார்கள்.

Published:Updated:

பொன்னேர் பூட்டுதல் என்றால் என்ன தெரியுமா? | My Vikatan

பொன்னேர் உழுதல் என்றால் நல்ல நாள் பார்த்து முதன் முதலாக ஏர் பிடித்து உழவு செய்யும் முறையாகும். சித்திரை மாதத்தில் செய்யும் உழவை கோடை உழவு, புழுதி உழவு என்று சொல்வார்கள். அப்போது அவர்கள் ஏரை வாழ்த்தி விவசாயம் நன்கு செழிக்க பாடும் பாட்டை ஏர்மங்கலம் என்பார்கள்.

பொன்னேர் உழவு
News
பொன்னேர் உழவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன்னுரையாக சில விஷயங்கள் இருக்கும். அதிலிருந்து தொடங்கி தான் அடுத்த கட்டம் நோக்கி நகரும்.

நமது நாட்டின் பிரதான தொழில் விவசாயம். விவசாயமே நமக்கு உயிர் மூச்சு. பாரம்பரிய பெருமைக்குரிய விவசாயத்தில் முன்னுரையாக இருப்பது பொன்னேர் பூட்டுதல் விழா. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிறந்ததும் பொன்னேர் பூட்டும் விழா நடக்கும்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள 18 கிராமத்து மக்கள் ஒன்றாக சேர்ந்து பொன்னேர் பூட்டி. விவசாயம் செழிக்க வழிபட்ட நிகழ்ச்சி சென்ற மாதம் நடந்துள்ளது. விவசாயத்தில் மிகச் சிறப்பான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொன்னேர் உழுதல் என்றால் நல்ல நாள் பார்த்து முதன் முதலாக ஏர் பிடித்து உழவு செய்யும் முறையாகும். சித்திரை மாதத்தில் செய்யும் உழவை கோடை உழவு, புழுதி உழவு என்று சொல்வார்கள். அப்போது அவர்கள் ஏரை வாழ்த்தி விவசாயம் நன்கு செழிக்க பாடும் பாட்டை ஏர்மங்கலம் என்பார்கள்.

பொன்னேர் உழுதல்
பொன்னேர் உழுதல்

சங்க காலம் தொட்டே இந்த நிகழ்வு நடந்து வருகிறது என்பதற்கு சான்று உள்ளது.  சிலப்பதிகாரம் 'நாடுகாண் காதை' யில் கோவலனும் கண்ணகியும் புகார் நகரிலிருந்து புறப்பட்டு கவுந்தியடிகளுடன் மதுரையை நோக்கி பயணம் செய்யும் போது வழிநெடுகிலும் வயல்களில் நாற்று நடும் பெண்கள் பாட்டொலியும் பொன்னேர் பூட்டி நிற்கும் ஏர் மங்கலப் பாட்டொலியும் கேட்டுக் கொண்டே நடந்து சென்றதாக இளங்கோவடிகள்  பாடியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் (வேலூர் அருகே உள்ள) கல்நார்சம்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட 'சித்திரமேழி' கல்வெட்டிலும் இது தொடர்பான தகவல்கள் உள்ளன.

13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இது. மேழி என்றால் உழவுக் கலப்பை அல்லது ஏர் என்று பெயர். சித்திரமேழி என்றால் அழகான கலப்பை என்று பொருள். சித்திரமாக பொறிக்கப்பட்டு இருக்கும் உழவுக் கலப்பை முத்திரையே சித்திரமேழி என்று குறிப்பிடப்படுகிறது. சித்திரமேழி சின்னம் உழவுத்தொழிலை அடிப்படையாக கொண்ட வேளாண் மக்களின் அதிகார குறியீடாக அக்காலத்தில் கருதப்பட்டது. இந்த கல்வெட்டு பழங்கால உழவுத் தொழிலின் சிறப்பை விளக்குகிறது. ஒவ்வொரு ஆடி மாதமும் முதல் புதன்கிழமை அன்று ஏர் பூட்டி தங்கள் நிலத்தில் உழுது முளை கட்டிய நவ தானியங்களை தூவி வழிபட்டனர்.. இவ்வழக்கம் பொன்னேர் பூட்டும் விழாவை நினைவுபடுத்துகிறது.

நல்லேர் பூட்டுதல்
நல்லேர் பூட்டுதல்

கொலம்பஸ் வருகைக்கு முன்பு இருந்த அமெரிக்காவில் இருந்தது இன்கா பேரரசு (காலம் 1438-1533).  இங்கு விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்து வந்தது.  மன்னராட்சி தான் அங்கு நடந்தது.பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி அங்கேயும் நடந்துள்ளது. மன்னர் முதன் முதலாக உழுது அதை தொடங்கி வைப்பார். 

ஆங்கிலத்தில் இதை  'ROYAL PLOUGHING CEREMONY' என்று அழைப்பார்கள்.  கம்போடியா மற்றும் தாய்லாந்து, மற்றும்  பர்மா நாடுகளிலும் இது கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த பொன்னேர் பூட்டும் விழா தற்போது நடந்து வருகிறது. ஏர் கலப்பை டிராக்டருக்கு வழி விட்டு ஒதுங்கி கொண்டு நின்று நீண்ட காலமாகிவிட்டது.

விவசாயத்தில் மாடுகளின் பயன்பாடும் குறைந்து விட்டது.'ஏ தன்னன்னானே...தானே நானே..' என்று பாடிக்கொண்டு பெண்கள் நடவு நடுவதை பார்க்கும் போது மிக அழகாகவும் இனிமையாகவும் இருக்கும். அதற்கும் தற்போது இயந்திரம் வந்துவிட்டது.

பொன்னேர் பூட்டுதல் என்றால் என்ன தெரியுமா? | My Vikatan

அறுவடைக்கும் இயந்திரம்தான்.

"மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று

யானை கட்டி போரடிக்கும் அழகான தென்மதுரை" -இந்த காட்சிகள் இனி இலக்கியங்களில் மட்டுமே வாசிக்க முடியும். இயந்திரங்கள் ஆட்சி நடக்கும் காலத்தில் பழமையான பொன்னேர் பூட்டுதல் விழா விவசாயம் பிரதானமாக நடக்கும் இடங்களில் எல்லாம் தொடர வேண்டும். நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஏர் கலப்பைக்கு மரியாதை செலுத்த வேண்டும்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்"

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்பவரே உரிமையோடு வாழ்பவர். மற்றவர்கள் எல்லாம் பிறரை தொழுது உண்டு அவர்கள் பின் தொடர்ந்து செல்பவர்கள் என்று வள்ளுவர் விவசாயத்தை உயர்த்தி சொல்கிறார்.

பொன்னேர் பூட்டிய மானாவாரி விவசாயிகள்
பொன்னேர் பூட்டிய மானாவாரி விவசாயிகள்

பொன்னேர் பூட்டுதல் என்ற முன்னுரையோடு தொடங்கும் விவசாயத்தில் "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஒழுங்கா பாடுபடு வயக்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்.."

-இப்படி ஒரு அற்புதமான பாடலை மருதகாசி அவர்கள் எழுதி மக்கள் திலகம் அவர்களின் 'விவசாயி' படத்தில் இடம்பெறும் சூழ்நிலை உருவானது. நம் முதுகெலும்பான விவசாயம் செழிக்க ஆண்டுதோறும் பொன்னேர் பூட்டும் விழா நடக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை அரசாங்கமும் செய்ய வேண்டும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.