Published:Updated:

குட மிளகாயில் மெகா சைஸ் சோளம், உருளைக்கிழங்கில் கம்பு! டன் கணக்கு காய்கறிகளில் களைகட்டிய கோத்தகிரி!

காய்கறி கண்காட்சி
News
காய்கறி கண்காட்சி

நீலகிரி வரையாடு, சிவலிங்கம், இருவாச்சி பறவை, தேர், பெங்குயின், ஒட்டகச்சிவிங்கி போன்றவற்றின் உருவங்களை காய்கறிகள் மூலம் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.

Published:Updated:

குட மிளகாயில் மெகா சைஸ் சோளம், உருளைக்கிழங்கில் கம்பு! டன் கணக்கு காய்கறிகளில் களைகட்டிய கோத்தகிரி!

நீலகிரி வரையாடு, சிவலிங்கம், இருவாச்சி பறவை, தேர், பெங்குயின், ஒட்டகச்சிவிங்கி போன்றவற்றின் உருவங்களை காய்கறிகள் மூலம் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.

காய்கறி கண்காட்சி
News
காய்கறி கண்காட்சி

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில், தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை கட்டுபாப்பாட்டில் உள்ள அரசு பூங்காக்களில், மே மாதம் கோடைவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

நடப்பு ஆண்டுக்கான கோடை விழை கோத்தகிரியில் உள்ள அரசு பூங்காவான நேரு பார்க்கில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. 12- வது காய்கறி கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ‌.ராசா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

காய்கறி கண்காட்சி
காய்கறி கண்காட்சி

காய்கறி கண்காட்சியின் சிறப்பு உலக சிறுதானிய ஆண்டை போற்றும் வகையில் சிறுதானியங்களை முன்னிலைப்படுத்தி சிறப்பு அலங்காரங்களைச் செய்துள்ளனர். ஒன்றரை டன் உருளைக்கிழங்கில் பிரமாண்ட கம்பு ( சிறுதானியம்) வடிவம், குடமிளகாய் மற்றும் பஞ்சி மிளகாய்களில் மெகா சைஸ் சோள வடிவம், கத்திரிக்காய்களில் யானை குடும்பம், பாகற்காய்களில் முதலை, பூசணிக்காய்களில் டிராகன் உருவம் மற்றும் நீலகிரி 200 ஆண்டின் சிறப்பம்சமாக `நீலகிரி - 200' வடிவத்தை காய்கறி அலங்காரம் என பல்வேறு வடிவமைப்புகளை நீலகிரி தோட்டக்கலைத்துறை தத்ரூபமாக வடிவமைத்து காட்சிப் படுத்தியுள்ளது.

இது மட்டுமல்லாது, கோவை, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு நீலகிரி வரையாடு, சிவலிங்கம், இருவாச்சி பறவை, தேர், பெங்குயின், ஒட்டகச்சிவிங்கி போன்றவற்றின் உருவங்களை காய்கறிகள் மூலம் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.

காய்கறி கண்காட்சி
காய்கறி கண்காட்சி

பூங்கா நுழைவு வாயில் முதல் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட டன் கணக்கான காய்கறிகளை சுற்றுலா பயணிகள் ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்துச் சென்றனர். நாளை நிறைவு விழா நடைபெற உள்ளது. காய்கறிகளில் சிறப்பு அலங்காரங்களைச் செய்த கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கவுள்ளனர்.