Published:Updated:

``வடமாநிலத்தவர்களால் எங்களுக்கு வேலை கொடுப்பதில்லை" போராட்டத்தில் தென்னை தொழிலாளர்கள்!

தென்னை தொழிலாளர்கள் போராட்டம்
News
தென்னை தொழிலாளர்கள் போராட்டம்

பல ஆண்டுகளாக தென்னை மரம் ஏறுதல், தேங்காய் உரித்தல் போன்ற தென்னை சார்ந்த தொழிலை செய்து வருகிறோம். குறைவான கூலிக்கு வடமாநிலத்தவர்கள் வருவதால், தோட்டத்து உரிமையாளர்கள் எங்களுக்கு வேலை கொடுப்பதில்லை. இதனால், எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது -தென்னை தொழிலாளர்கள்.

Published:Updated:

``வடமாநிலத்தவர்களால் எங்களுக்கு வேலை கொடுப்பதில்லை" போராட்டத்தில் தென்னை தொழிலாளர்கள்!

பல ஆண்டுகளாக தென்னை மரம் ஏறுதல், தேங்காய் உரித்தல் போன்ற தென்னை சார்ந்த தொழிலை செய்து வருகிறோம். குறைவான கூலிக்கு வடமாநிலத்தவர்கள் வருவதால், தோட்டத்து உரிமையாளர்கள் எங்களுக்கு வேலை கொடுப்பதில்லை. இதனால், எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது -தென்னை தொழிலாளர்கள்.

தென்னை தொழிலாளர்கள் போராட்டம்
News
தென்னை தொழிலாளர்கள் போராட்டம்

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயம் சார்ந்த பணிகளில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகக் கூறி, திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை தென்னை தொழிலாளர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராடத்தில் ஈடுபட்டனர்.

கருப்பசாமி
கருப்பசாமி

இதுகுறித்து தமிழ்நாடு தென்னை தொழிலாளர்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி கூறுகையில், ''கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தென்னந் தோப்புகளில் தென்னை மரம் ஏறுதல், தேங்காய் உரித்தல், உடைத்தல், தேங்காய்களை வாகனத்தில் ஏற்றுதல் போன்ற வேலைகளை பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் செய்து வருகிறோம்.

நாளொன்றுக்கு ரூ.100-க்கும் குறைவாக கூலி பெற்று வந்தோம். அது படிப்படியாக உயர்ந்து வேலையைப் பொருத்து நாளொன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை கூலி பெற்று வருகிறோம். தமிழ்நாட்டுக்குள் கட்டுமானம் மற்றும் தொழிற்சாலை பணிகளுக்காக வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் இன்று விவசாயப் பணிகளிலும் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.

நாளொன்றுக்கு ரூ.500-க்கும் கீழ் கூலியைப் பெற்றுக் கொண்டு வடமாநிலத்தவர்கள் வேலை செய்வதால், தோட்டத்து உரிமையாளர்கள் எங்களுக்கு வேலை கொடுப்பதில்லை. இதனால், காலங்காலமாக தென்னை சார்ந்த தொழில்களை செய்து வந்த எங்களின் வாழ்வாதரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாற்று வேலைகளைத் தேடிச் செல்லும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

போராட்டம்
போராட்டம்

தமிழ்நாடு அரசு வடமாநிலத்தவர்களின் வருகையைக் கட்டுப்படுத்தாவிட்டால், சொந்த மண்ணில் அகதிகளாக மாறும் நிலைதான் ஏற்படும். எனவே, இதைத் தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பதுடன், தென்னை தொழிலாளர் நல வாரியத்தை அமைக்க வேண்டும்'' என்றார்.