"நில விற்பனையில் நடக்கிற மோசடிகளைத் தவிர்க்கிறதுக்காகவும் சுலபமா வரிவசூல் பண்றதுக்காகவும், சர்வே பண்ணின நிலங்களுக்குத் தனி அடையாள எண் கொடுக்கிறதுக்கு மத்திய அரசு முடிவு செஞ்சிருக்கு. நமக்கு ஆதார் எண் கொடுத்திருக்கிறது மாதிரி நிலத்துக்கான அடையாள எண் இது. விவரங்களுக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2ok1efw
ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு, வருங்கால வைப்பு நிதிக்கணக்கு, வருமான வரிக் கணக்கு எண் எல்லாத்தோடும் இணைச்சிருக்கிறதால, ஒருத்தரோட ஆதார் எண்ணை வெச்சே அவரோட எல்லா விவரங்களையும் தெரிஞ்சுக்க முடியும். அதேபோல, நிலத்துக்கான இந்தப் பிரத்யேக எண்ணை வெச்சு… அது அமைஞ்சிருக்கிற மாநிலம், மாவட்டம், கிராமம், உரிமையாளர் பெயர் எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியும்.
இதுமூலமா நில விற்பனையில் எந்த மோசடியும் செய்ய முடியாது. வீட்டுமனைகளுக்கும் இந்த மாதிரி அடையாள எண் கொடுக்கப்போறாங்க.
நிலத்துக்கான பிரத்யேக எண்ணை உரிமையாளரின் ஆதார் எண்ணோடு இணைக்கிறதால, குறிப்பிட்ட நிலத்தின் முந்தைய உரிமையாளர்கள், வரி கட்டின விவரங்கள், அந்த நிலத்தின்மீது இருக்கிற கடன்கள் எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியும். இதுமூலமா நில விற்பனையில் எந்த மோசடியும் செய்ய முடியாது. வீட்டுமனைகளுக்கும் இந்த மாதிரி அடையாள எண் கொடுக்கப்போறாங்க. இந்தத்திட்டத்துக்கான ஆரம்பக்கட்ட வேலைகளை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஆரம்பிச்சிருக்கு" என்றார் ஏரோட்டி.
"நல்ல விஷயம்தான். குறைவான விலைக்குக் கிடைக்குதேன்னு எதையும் விசாரிக்காம நான் ஒரு வீட்டுமனையை வாங்கினேன். அதில் வீடு கட்டலாம்னு சொசைட்டியில் கடன் கேட்டுப் போனேன். அப்போதான் அது பஞ்சமி நிலம்னு தெரிய வந்துச்சு. நிலத்த மேல ஏற்கெனவே கேஸ் நடந்துட்டிருக்கிற விஷயமும் அப்போதான் தெரிஞ்சது. உடனே பத்திரப்பதிவு ஆபீஸூக்குப் போய்க் கேட்டேன். அவங்க எங்களுக்குத் தெரியாது. நீங்க கோர்ட்டுல கேஸ் போட்டுப் பார்த்துக்கங்கனு சொல்லிட்டாங்க.

அப்புறம் ஊர்ல பஞ்சாயத்துக் கூட்டிதான் எனக்கு வித்தவர்கிட்ட இருந்து பணம் வாங்க முடிஞ்சது. அதுவும் நான் கொடுத்ததில் முக்கால்வாசிப் பணம்தான் திரும்ப வந்தது. நிலம் வாங்குற விஷயத்தில் எப்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்" என்று கூறியவர் காய்கறி, கூடையிலிருந்து ஒரு பப்பாளிப் பழத்தை எடுத்து நறுக்கி, ஆளுக்கு ஒரு கீற்றைக் கொடுத்தார். அதைச் சாப்பிட்டுக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், வாத்தியார்.
- இன்னும் நிறைய நிறைய வேளாண் சார்ந்த செய்திகள் அடங்கிய பசுமை விகடன் இதழின் 'மரத்தடி மாநாடு' பகுதியை முழுமையாக வாசிக்க > மரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்! https://www.vikatan.com/news/agriculture/marathadi-manadu-4
| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |