பிரதமர் மோடி நேற்று அகில இந்திய வானொலியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த எழிலன், சூரிய சக்தியால் இயங்குகிற பம்பு செட் பயன்படுத்துவதைப் பாராட்டினார்.

நேற்று நடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மத்திய அரசின் 'பிரதம மந்திரி குசும் யோஜனா' திட்டம்பற்றி உரையாற்றினார். அந்த திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த எழிலன், தனது வயலில் 10 குதிரை சக்தி திறன் கொண்ட சூரிய சக்தியால் இயங்குகிற பம்ப்செட்டைப் பொருத்தி உள்ளார். இதனால், அவரது செலவுகள் குறைந்து வருமானம் அதிகரித்து வருகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.
காஞ்சிபுரத்தை மாவட்டத்தை சேர்ந்த எழிலன் பட்டப்படிப்பு முடித்துவிட்டு விவசாயம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் அவர் டீசல் என்ஜின் பயன்படுத்திதான் தன்னுடைய நிலத்திற்கு நீர் பாய்ச்சி வந்திருக்கிறார். இந்த டீசல் என்ஜின் மூலம் ஆழ்துளை கிணறுகளில் ஆழத்தில் உள்ள நீரை உறிஞ்சி எடுக்க முடியவில்லை. மேலும், டீசல் என்ஜினுக்கு செலவு அதிகம் ஆனது.

இதற்கு மாற்றாக பிரதம மந்திரி குசும் யோஜனா திட்டத்தின்கீழ், அவரது நிலத்தில் 5 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல்கள் அமைத்து சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் 10 குதிரை சக்தி திறன் கொண்ட மோட்டரை பொருத்தி தனது நிலத்துக்கு நீர் பாய்ச்ச தொடங்கியுள்ளார். இதனால் இவருக்கு மின்சாரம் மற்றும் டீசல் செலவு இல்லாமல், லாபம் பெருகியுள்ளது.
பிரதமர் மோடி தனது பெயரை 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் குறிப்பிட்டதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் எழிலன்.