நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பயிற்சி : சிறுதானியச் சாகுபடியில் நல்ல மகசூல் தரும் ரகங்கள்...

நேரலையில்...
பிரீமியம் ஸ்டோரி
News
நேரலையில்...

ஜெ.மகிழ்

சுமை விகடன், தர்மபுரி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து ‘லாபம் தரும் சிறுதானிய சாகுபடியும் மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பமும்’ என்ற நேரலை கருத்தரங்கைக் கடந்த நவம்பர் 4-ம் தேதி நடத்தின. இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதுமுள்ள சுமார் 350 பேர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ஜவஹர்லால், மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பால்பாண்டி, சமுதாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் அமுதா, தர்மபுரி வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிவக்குமார், முனைவர் யுவராஜா, முனைவர் மு.இளமாறன் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றினர்.

பயிற்சி : சிறுதானியச் சாகுபடியில் நல்ல மகசூல் தரும் ரகங்கள்...

சிறுதானிய ரகங்கள் குறித்துப் பேசிய மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த முனைவர் வன்னியராஜன், ‘‘சிறுதானியங்களை மானாவாரி என்றால் ஆடி, புரட்டாசி, மார்கழி பட்டத்தில் விதைக்கலாம். இறவையில் என்றால் எப்போது வேண்டுமென்றாலும் விதைக்கலாம். கேழ்வரகுக்கு கோ-14, 15 ஆகிய ரகங்களும், சாமைக்கு கோ-4, ஏ.டி.எல்-1, தினை கோ-7, ஏ.டி.எல்-1, வரகு கோ-3, டி.என்.ஏ.யு-86, பனிவரகு கோ-5, குதிரைவாலி எம்.டி.யு-1 ஆகிய ரகங்கள் நல்ல மகசூலும் நோய் எதிர்ப்புத் திறனும் கொண்டவை. சிறுதானியச் சாகுபடி மேற்கொள்பவர்கள் இந்த விதைகளை விதைக்கலாம்” என்றார்.

உடனடி தயார் உணவுகள் குறித்துப் பேசிய மதுரை சமுதாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் மீனாட்சி, “வீட்டிலிருந்தே தொழில் செய்ய ஏற்றவை சிறுதானிய உடனடி தயார் உணவுகள். பாயசம் மிக்ஸ், பொங்கல் மிக்ஸ், அதிரசம் மிக்ஸ் என்று பல பொருள்களைத் தயார் செய்யலாம். உடனடி தயார் உணவுகளுக்கான சந்தை வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக, இணைய வழியில்தான் இதற்கான சந்தை பெருகியிருக்கிறது” என்றார்.

தர்மபுரி வேளாண் அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த முனைவர் வீரணன் அருண் கிரிதாரி, ‘‘சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டும் பயிற்சி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களில் வழங்கப்படுகிறது. மதுரையிலுள்ள சமுதாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் இதற்கான பயிற்சிகள் கிடைக்கின்றன” என்றவர் பேக்கரி உணவுகள் தயாரிப்பு முறை குறித்து விளக்கினார்.

நேரலையில்...
நேரலையில்...

நிகழ்வில் தர்மபுரி மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவலிங்கம், தனது சிறுதானிய தொழில் குறித்தான வெற்றி அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியின் நேரலையைப் பசுமை விகடன் முகநூல் பக்கத்தில் பார்க்கலாம். லிங்க் https://www.facebook.com/PasumaiVikatan/videos/697465027545605/

பயிற்சி : சிறுதானியச் சாகுபடியில் நல்ல மகசூல் தரும் ரகங்கள்...

நிகழ்வின் வீடியோவைக் காண ஸ்கேன் செய்யவும்.