கால்நடை
நாட்டு நடப்பு
Published:Updated:

தடுப்பூசி முதல் ஊட்டச்சத்து டானிக் வரை... கால்நடைகளின் நலனில் பங்காற்றும் நலக்கல்வி மையம்!

முனைவர் சி.சௌந்தரராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
முனைவர் சி.சௌந்தரராஜன்

சேவை

சென்னை, மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கும் கால்நடை நலக்கல்வி மையம், கால்நடைகளுக்கான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் நோய்களைக் கண்டறிந்து அதற்கான மருந்துகளைக் கண்டுபிடித்தல், ஊட்டச்சத்து டானிக் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளையும் இம்மையம் மேற்கொண்டு வருகிறது.

இதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள இம்மையத்துக்கு நேரில் சென்றோம். நம்மிடம் பேசிய இம்மையத்தின் இயக்குநர் முனைவர் சி.சௌந்தரராஜன் “விவசாயிகளுக்கு வருமானம் கொடுக்கக்கூடிய முக்கிய வாழ்வாதாரங்களில் ஒன்றாகக் கால்நடை வளர்ப்புத் திகழ்கிறது. எனவே, கால்நடைகளின் நலனில் தமிழக அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்... ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு ஏற்படும் பல விதமான நோய்களையும் கண்டறிந்து, அதற்குத் தீர்வு கண்டு வருகிறது. பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமாகச் செயல்படும் இம்மையத்தின் கீழ் 13 ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

முனைவர் சி.சௌந்தரராஜன்
முனைவர் சி.சௌந்தரராஜன்

இம்மையத்தின் முதன்மையான நோக்கம்... ஆடு, மாடு, கோழி, வாத்து, முயல் உள்ளிட்ட கால்நடைகளும், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளும் ஏதேனும் நோய்களால் பாதிக்கப்பட்டால், இம்மையத்தின் ஆய்வக அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அதுகுறித்து விரிவான அறிக்கை அளிப் பார்கள். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், அந்தந்தப் பகுதியில் அவ்வப்போது கால்நடை களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து, இந்த மையத்துக்கு ஆய்வறிக்கை அனுப்புவார்கள். அவற்றின் அடிப்படையில் நோய்த்தடுப்பு தொடர்பாக, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவோம்.

நச்சுயிரி தடுப்பூசி தயாரிப்பு ஆய்வகம்

நச்சுயிரி தடுப்பூசி தயாரிப்பு ஆய்வகத்தின் சார்பில் பல தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துப் பரவலாக்கி வருகிறோம். முயல்களுக்கு ஏற்படும் சளி, வாத்துகளுக்கு ஏற்படும் கழிச்சலுக்கும் தடுப்பூசி கண்டுபிடித் திருக்கிறோம். ஆடுகளுக்கு உடல் எடை குறைவை ஏற்படுத்தும் ஜோனிஸ் நோய்க்கும் தடுப்பூசி கண்டறிந்திருக்கிறோம். ஆடுகளுக்கு ஏற்படும் முக்கியமான நோயான நீலநாக்கு நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்து வெளியிட் டிருக்கிறோம். ஒரு காலத்தில் தென் மாவட்டங் களில் ஆடுகளுக்கு இந்த நீலநாக்கு நோய் ஏற்பட்டு பல ஆடுகள் உயிரிழந்துள்ளன. தடுப்பூசி கண்டுபிடித்ததன் வாயிலாகப் பெருவாரியாக இந்த நோயைக் கட்டுப்படுத்தி விட்டோம்.

தடுப்பூசி மருந்துகள்
தடுப்பூசி மருந்துகள்

நுண்ணுயிரி தடுப்பூசி மையம்

பன்றிகளுக்கு ஏற்படும் காய்ச்சலைத் தடுக்க... இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. பன்றி சிர்கோ நச்சுயிரிக் கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் ஏராளமான மாடுகள் இறந்து போகக் காரணமாக இருந்த கேப்ரிபாக்ஸ் வைரஸால் ஏற்படும் ‘பெரிய தட்டம்மை (லம்பி ஸ்கின்) நோய்க்கும் தற்போது தடுப்பூசி கண்டுபிடித்து வெளியிட் டிருக்கிறோம்.

கால்நடை தீவனம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான மருந்து கண்காணிப்பு ஆய்வகம்

கால்நடைகள் நச்சுயிரிகளால் பாதிக்கப் பட்டு, சில நேரங்களில் இறக்க வாய்ப்புண்டு. தண்ணீர், தீவனம், மண் என இவற்றில் ஏதாவது ஒன்றைப் பரிசோதனைக்கு அனுப்பலாம். அது என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதைக் கண்டறிந்து சொல் வோம். மனிதர்களிலிருந்து விலங்குகளுக்கோ, விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கோ பரவும் நோய்களைக் கண்டறிவதற்கான பிரத்யேக ஆய்வகமும் இங்கு செயல்படுகிறது. விலங்கு களிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய நோயாக, எலிக் காய்ச்சல் உள்ளது. இதை முன்கூட்டியே அறிந்துகொள்வது மிகவும் அவசியம். கால்நடைகளுக்கு... எலிக் காய்ச்சல், அடைப்பான்(ஆந்த்ராக்ஸ்), கன்று வீச்சு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டால், அவற்றைக் கண்டுபிடிப்பதற்கான சாதனைங்களையும் இந்த மையம் உருவாக்கியுள்ளது.

தனிப்பட்ட ஒரு விவசாயியின் கால்நடைக்கு ஏதாவது நோய் தாக்கினாலோ, நோய் தாக்கி இறந்தாலோ... அது தொடர்பாக எங்கள் மையத்தை விவசாயிகள் அணுகலாம். ஆய்வு செய்து... எதனால் அந்த நோய் ஏற்பட்டது எனச் சொல்வோம். ஊட்டி மற்றும் மேச்சேரியில் உள்ள ஆடு ஆராய்ச்சி நிலையங்களிலும்... நாமக்கல் மற்றும் காட்டுப் பாக்கத்தில் உள்ள கோழி ஆராய்ச்சி நிலையங் களிலும் நோய்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். ஆராய்ச்சி நிலையங்கள் மட்டுமல்ல, பண்ணையாளர்கள் விரும் பினால் அவர்களுடைய பண்ணைக்கே வந்து ஆய்வு செய்யவும் தயாராக இருக்கிறோம்.

தடுப்பூசி மருந்துகள்
தடுப்பூசி மருந்துகள்


கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றுத் தளம்

இந்தியாவிலேயே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழத்தில்தான் இது போன்ற ஒரு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிதல், அதற்கான தடுப்பூசிகள்... ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் டானிக் தயாரிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள், மருந்துகள், உணவு தயாரிப்புத் தொழில் நுட்பங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. அவை நிர்ணயிக்கப் பட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

உயிர் பாதுகாப்புக் கால்நடை நோய் ஆய்வகம் (பி.எஸ்.எல்-3)

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் இந்த வசதி உள்ளது. கோமாரி, பறவைக் காய்ச்சல், அடைப்பான், கன்று வீச்சு நோய், வெறிநாய்க்கடி போன்றவற்றை இந்த ஆய்வகத்தில்தான் கண்டுபிடிக்க முடியும். சிலவகை நோய்க்கிருமிகளைச் சாதாரண ஆய்வகங்களில் கண்டுபிடிக்க முடியாது. அதற்கென உள்ள பிரத்யேக ஆய்வுக்கூடங்களில்தான் கண்டுபிடிக்க முடியும். அப்படியொரு பிரத்யேகமான ஆய்வகமாக உயிர் பாதுகாப்புக் கால்நடை ஆய்வக மையம் செயல்படுகிறது. பிற துறை விஞ்ஞானிகளும் இங்கு வந்து ஆய்வு செய்யலாம்.

ஆய்வக விலங்கின பிரிவு

கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப் படும் மருந்துகள், தடுப்பூசிகள், பூஸ்ட் டானிக்குகள் பெரும்பாலும் சிறிய விலங்கு களில் செலுத்திதான் ஆராய்ச்சி மேற் கொள்ளப்படுகிறது. எலி, முயல், கின்னிபிக் உள்ளிட்ட விலங்குகள்தான் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆய்வக விலங்குகளை எப்படிப் பராமரிக்கலாம், கையாளலாம் என்பதற்குப் பயிற்சி கொடுக் கிறோம். ஒரு குறிப்பிட்ட விலங்கில் ஆராய்ச்சி செய்கிறோம் என்றால் அந்த விலங்கு, ஆய்வகத்தில் எப்படிச் செயல்படுகிறது என்பதை இங்கு வந்து நேரடியாகப் பார்க்கலாம். ஐரோப்பாவுக்கு வெளியே இங்கு மட்டும்தான் இந்தப் பயிற்சி அளிக்கப் படுகிறது. நாமக்கல்லில் செயல்படும் கோழியின நோய் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு ஆய்வகம், கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆய்வகம், தலைவாசலில் உள்ள கோழியின நோய் ஆய்வகம் எனப் பல மையங்கள் எங்கள் இயக்குநரகத்தின் கீழ் இயங்குகிறது” என்றவர், நிறைவாக,

கால்நடை மருந்துகள்
கால்நடை மருந்துகள்

“இங்குள்ள வசதிகளை விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோன்று நோய்கள் குறித்தோ, தடுப்பூசிகள் குறித்தோ சந்தேகங்களுக்கு இங்கே அணுகலாம்” என்று விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,

முனைவர் சி.சௌந்தரராஜன், இயக்குநர், கால்நடை நலக்கல்வி இயக்குநரகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம், சென்னை-600 051

044 25555151, 95005 63853

உங்ககிட்ட ஐடியா இருக்கா... எங்ககிட்ட வாங்க!

‘‘விவசாயிகள், பட்டதாரி இளைஞர்கள், கால்நடை படிப்புப் படித்தவர்கள் என்று யாராக இருந்தாலும் சரி... தங்களிடம் கால்நடைகளின் நோய் தீர்க்கும் தடுப்பூசி, மருந்து, தீவனம், மூலிகை மருந்து, ஊட்டச்சத்து டானிக் தயாரிக்கும் தொழில் செய்வதற்கான யோசனை இருந்தால் எங்களைத் தாராளமாக அணுகலாம். இந்த யோசனையைச் செயல்படுத்தி விரிவாக்கம் செய்து, ஆய்வக அளவில் செயல்படுத்தி வெளிப்படுத்துவதற்கான நிதியுதவி வசதியும் செய்து தரப்படும். இந்த யோசனையைச் செயல்படுத்துவதற்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறதோ... அதற்கும் வழிகாட்டுகிறோம். கிரேடு ஏ பிரிவில் 2 லட்சமும், கிரேடு பி பிரிவில் 5 லட்சமும், சி பிரிவில் 49 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும். இது எங்கள் இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் தானுவாஸ் தொடக்க நிலை தொழில் உருவாக்க அமைப்பு (TANUVAS-Veterinary Incubation Foundation) மூலம் வழிகாட்டுகிறோம்” என்கிறார் முனைவர் சி.சௌந்தரராஜன்.