Published:Updated:

கால்நடைகளுக்கு பாலி கிளினிக் திறக்கப்படுமா? எதிர்பார்ப்பில் விவசாயிகள்...

கால்நடை
News
கால்நடை

அனைத்து இடங்களிலும் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், கால்நடை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நோய் பரவல் காலங்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் சிகிச்சை அளிக்க முடியாமல் கால்நடை வளர்ப்போர் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நிறைந்த தேனி மாவட்டத்தில் கால்நடைகளும் அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மலைமாடுகளின் எண்ணிக்கையும் தேனியில் அதிகம். காளை, பசு, ஆடு, கோழிகள் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கோமாரி எனக் கூறப்படும் காணை நோய் கால்நடைகளுக்கு பெரும் பாதிப்பைக் கொடுக்கிறது. அதேபோல கேரள எல்லையில் தேனி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு தொற்று நோய் பரவல் ஏற்படுகிறது.

கால்நடை முகாம்
கால்நடை முகாம்
பைல் படம்

மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி நகராட்சி பகுதிகளில் மட்டும் கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. கம்பம், கூடலூர், க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 33 கால்நடை மருந்தகங்கள் அமைந்துள்ளன. தேனி கால்நடை மருத்துவமனையில் மட்டுமே அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது.

அனைத்து இடங்களிலும் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், கால்நடை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நோய் பரவல் காலங்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் சிகிச்சை அளிக்க முடியாமல் கால்நடை வளர்ப்போர் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

ஆடுகள்
ஆடுகள்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கால்நடை பாலி கிளினிக் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். எம்.ஆர்.ஐ ஸ்கேன், எக்ஸ்ரே லேப் உட்பட அறுவைசிகிச்சைக்கான வசதிகளும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேனி மாவட்டத்தில் இதுவரை பாலி கிளினிக் தொடங்கப்படவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

தேனி மாவட்ட விவசாய சங்கத்தைச் சேர்ந்த கண்ணனிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``ஒரு மருத்துவர் 3 பகுதிகளில் சிகிச்சை அளிக்கிறார். குறிப்பிட்ட நேரத்துக்கும் அவர்கள் வருவது இல்லை. மாட்டுக்கு சினை ஊசி போடக்கூட முடியாத நிலை உள்ளது. மாவட்த்துக்குத் தேவையான தடுப்பூசி கூட முழுமையாக வரவில்லை. ஏனென்றால் அந்த ஊசிகளைப் போட இங்கு ஆட்கள் இல்லை. தேனியில் விவசாயிகள் விவசாயத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே வருவாய் ஈட்ட முடியும். அவர்களுக்கு ஆண்டுதோறும் வருவாய் தரக்கூடியது கால்நடை வளர்ப்பு மட்டுமே. எனவே, விவசாயிகள் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய கால்நடைகளைக் காப்பாற்ற தனியார் மருத்துவர்களை நாடுகின்றனர். இதனால் அதிகம் செலவாகிறது. எனவே, கால்நடைகள் அதிகம் உள்ள தேனி மாவட்டத்துக்கு அரசு பாலி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

கால்நடை வளர்க்கும் விவசாயிகள்
கால்நடை வளர்க்கும் விவசாயிகள்

இதுகுறித்து கால்நடைத்துறை தரப்பில் விசாரித்தோம். கால்நடைத்துறையில் தேனி மாவட்டம் மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் மருத்துவர்கள், உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் தகுந்த நேரத்துக்கு நோய் தடுப்பூசி செலுத்துவதில் பெரும் சிரமம் உள்ளது. இந்நிலையில் கால்நடைகளுக்கான பாலி கிளினிக்கள் திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. அங்கு 4 மருத்துவர்கள் அவர்களுக்கான உதவியாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட வேண்டும். நகராட்சி பகுதிகளில் திறப்பது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை என்றனர்.