`மாரி 2', `எனை நோக்கிப் பாயும் தோட்டா' முடித்தவுடன் இயக்குநர் தனுஷ் ரிட்டர்ன்ஸ்!Sponsoredநடிகர் தனுஷ் பிரெஞ்ச் மொழியில் நடித்த 'எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபக்கிர்' படம் சமீபத்தில் சர்வதேச அளவில் வெளியாகியது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'வடசென்னை' வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. தற்போது, பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி 2' படத்தைத் தொடர்ந்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பிலிருக்கும் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு அண்ணனாக  இயக்குநர் சசிகுமார் நடிக்கிறார்.

தனுஷ், தனது நடிப்பில் தயாராகும் படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு மீண்டும் இயக்குநர் அவதாரத்தை ஏற்கவுள்ளார். சென்ற வருடம் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த `ப.பாண்டி' அனைவருக்கும் பிடித்த படமாக இருந்தது. சென்ற வருடம் டிசம்பர் மாதம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்ததுபோல், தனுஷ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கவிருக்கிறார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored