ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் பாலிவுட் பிரபலம்!Sponsoredகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் பாலிவுட் ஸ்டார் நவாஸுதீன் சித்திக் இணைந்துள்ளார். 

`காலா' படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் முதல் முறையாகக் கார்த்திக் சுப்புராஜுடன் கைகோத்துள்ளார். பெயரிடப்படாத படத்துக்கான ஷூட்டிங் நடந்துவருகிறது. ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி, மகன்களாக பாபி சிம்ஹா, சனத் ரெட்டி அவர்களுடன் மேகா ஆகாஷ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், நடிகை சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி வைரலான நிலையில், தற்போது இப்படத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் இணைந்துள்ளார்.

Sponsored


‘பிளாக் பிரைடே’, ‘பீப்ளி லைவ்’, ‘கஹானி’, `கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர்' உள்ளிட்ட படங்களில் நடித்த தேசிய விருது பெற்ற நடிகர் நவாஸுதீன் சித்திக் ரஜினி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே, காலா படத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் நடித்த நிலையில் இந்தப் படத்தில் நவாசுதீன் சித்திக் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர் ரஜினி ஹாஸ்டல் வார்டனாக நடிக்கவுள்ளார்!

Sponsored
Trending Articles

Sponsored