அப்பாவி மாடல், `அடல்ட்ஸ் ஒன்லி’ ஹீரோயின்... கரெஞ்சித் சன்னி லியோனாக மாறிய கதை! #KarenjitKaurSponsoredன்னி லியோன்... 2017-ம் ஆண்டு, இந்தியாவில் கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட ஒரு பெயர். அழகு, உடலமைப்பு, வசீகரம், நடிப்பு என பாலிவுட் உலகத்துக்கு வந்த சில ஆண்டுகளிலேயே, பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அதே நேரம், பல குடும்பங்களில் வெறுப்பையும் சன்னி லியோன் சம்பாதிக்க தவறவில்லை.

ஹாலிவுட் `அடல்ட்ஸ் ஒன்லி' படங்களில் ஆரம்பித்து, பாலிவுட்டில் நடிக்கவந்து புகழ்பெற்றது வரை இவரின் அதிரடி பயணம், பாலிவுட் அதுவரை பார்த்திராதது. இது எப்படி சாத்தியம்? இவரின் பின்னணி என்ன? ஏன் இந்த நடிகைக்கு பாலிவுட் தேவை? பல கேள்விகள் அவரைத் துரத்திக்கொண்டே இருந்தன; இருக்கின்றன. அதற்கெல்லாம் விடை சொல்ல நினைத்தாரோ என்னவோ, தன் வாழ்க்கை கதையையே, `கரெஞ்சித் கவுர்'  என்ற பெயரில் வெப் சீரிஸாக நடிக்கிறார். இதன் இயக்குநர், அதித்யா. சமீபத்தில், `zee 5 originals'-ல் வெளியான இந்த வெப் தொடர், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் விமர்சனங்களையும் ஒருசேர பெற்றுவருகிறது.

Sponsored


கனடாவில் பிறந்த கரெஞ்சித் கவுர், சன்னி லியோனாக மாறும் கதை. இதை, இரண்டு சீசன்களாக, ஒவ்வொரு சீசனுக்கும் 10 எபிசோடு எனத் திட்டமிட்டுள்ளனர். முதல் சீசனுக்கான 10 எபிசோடுகளும் வெளியாகியுள்ளன. எப்படி இருக்கிறது இந்த வெப் தொடர்..? முதல் சீசனைப் பார்த்தேன்.

Sponsored


கட்டுப்பாடான சீக்கிய குடும்பத்தில் பிறந்த குட்டிப் பெண்ணாக அறிமுகமாகிறார், கரெஞ்சித் கவுர். அப்பா, அம்மா, தம்பி எனச் சிறிய உலகத்தில் விரிகிறது இவரின் வாழ்க்கை. பள்ளியில் நடக்கப்போகும் ஒரு நடன நிகழ்ச்சிக்கான உடையை, தானே சம்பாதித்து வாங்கி அணிகிறாள். அதை அப்பாவும் பாராட்டுகிறார். ஆனால், `உன் கிளிவேஜ் தெரிவதுபோல உடைகள் அணிந்து வெளியே செல்லக் கூடாது” என அம்மா திட்டவட்டமாக மறுக்கிறார். உடல் முழுவதும் மூடி இருப்பதுபோன்ற உடையை அணிந்துகொண்டு, அந்த நடன நிகழ்ச்சியில் சோகமாகக் கலந்துகொள்கிறாள் கரெஞ்சித்.

2016... ``ஒரு பாலியல் தொழிலாளருக்கும் ஆபாசப் பட நாயகிக்கும் என்ன வித்தியாசம்?”, ``நீங்கள் ஆபாசப் பட நாயகியாக மாறியதற்கு எப்போதாவது வருந்தியிருக்கிறீர்களா?” என்பன போன்ற பல கேள்விகளை, சன்னி லியோன் புன்னகையுடன் எதிர்கொண்ட அந்தப் பிரபல பேட்டியின் மாதிரியை இடையிடையே காண்பிக்கின்றனர். முதன்முதலாக மிகுந்த தயக்கத்துடன், ஒரு அடல்ஸ் ஒன்லி படத்தில் நடிக்கக் காத்திருப்பதும், சில ஆண்டுகள் கழித்து அவர் என்ன வேலை செய்து இவ்வளவு பணம் சம்பாதித்தார் என்பதைப் பெற்றோரிடம் மிகுந்த தயக்கத்துடன் கூற முற்படுவதும் என நான்கு விதமான சம்பவங்களை மையப்படுத்தி முதல் எபிசோடு விறுவிறுப்பு அடைகிறது.

இரண்டாவது எபிசோடு... கரெஞ்சித் தந்தை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்ல திட்டமிடுகிறார். இது, கரெஞ்சித்துக்குப் பிடிக்கவில்லை. குட்டிப் பெண்ணாக அவள் சத்தம் போடுகிறாள். ஆனாலும் அமெரிக்கா செல்கின்றனர். பிறகு, அந்தப் பேட்டியிலிருந்து ஒரு பகுதி, அமெரிக்கா பள்ளியில் சக மாணவர்கள் செய்யும் கேலி, முதல் முத்தம், முதன்முறையாக அடல்ஸ் ஒன்லி படத்தில் ஓர் ஆணுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் எப்படி நடிப்பது எனத் தெரியாமல் பதற்றமடைவது, தன் குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலையை உணர்ந்து, தயக்கத்துடன் நடிக்க ஒப்புக்கொண்டது என நீள்கிறது.

மூன்றிலிருந்து ஐந்து எபிசோடுகள் வரை, கரெஞ்சித் கவுரின் அப்பா அமெரிக்காவில் வேலை இழப்பது, அம்மாவின் குடிப் பழக்கம் பற்றி சன்னிக்கும் அவரின் தம்பிக்கும் தெரியவருவதும், சூழ்நிலை காரணமாக, அடல்ஸ் ஒன்லி பத்திரிகைகளுக்கு மாடலிங் செய்வது, அந்தப் பேட்டியில் தர்மச்சங்கடமான கேள்விகளுக்கு சன்னியின் கூர்மையான பதில்கள், `அடல்ட்ஸ் ஒன்லி' திரைப்படங்களில் பெற்றோருக்குத் தெரியாமல் நடிப்பது என அதே நான்கு விதமான கோணங்கள் காட்டியிருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. 

அடுத்த இரண்டு எபிசோடுகளில் கரெஞ்சித் கவுர், தான் லியோனாக மாறியதையும், ‘penthouse pet of the year' விருதுபெற்றது பற்றியும், பெற்றோரிடம் தயங்கித் தயங்கி சொல்வது என நீள்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை மிகவும் எளிதாக யூகிக்க முடிவதால், சுவாரஸ்யமற்றே நகர்கிறது.

எட்டாவது எபிசோடு, முதன்முறையாகக் கணவர் டெனியல் வெபரை எங்கே எப்படிச் சந்தித்தார் என்று விவரிக்கிறது. அடல்ஸ் ஒன்லி விருது விழாவில் சன்னியைப் பார்த்து, டெனியல் வெபர் (Daniel Weber) பாடும் பாடல் காட்சிகளும், பேட்டியில் திருமண வாழ்க்கை குறித்து கேட்கப்படும் சங்கடமான கேள்விக்குச் சன்னியின் ஆத்மார்த்த பதிலும் செம்ம! குறிப்பாக, டெனியலுக்கும் கரெஞ்சித் கவுருக்கும் இடையே மலரும் காதலை மிக இயல்பாக உருவாக்கியிருப்பது ரசிக்கவைக்கிறது. ஒரு காட்சியில், "உங்களுக்குச் சன்னி பிடிக்குமா? கரெஞ்சித் கவுரைப் பிடிக்குமா?" என்று கரெஞ்சித் கேட்கிறார். “எனக்கு கரெஞ்சித் என்ற மனுஷியைத்தான் மிகவும் பிடிக்கும்” என்று டெனியல் சொல்லும் காட்சி பேரன்பின் துளி.

அடல்ஸ் ஒன்லி திரைப்படங்களின் நடிகையாகத் தான் இருந்ததை நினைத்து சன்னி லியோன் ஒருபோதும் வருந்தியதில்லை. ஆனால், தன்னால் தன் பெற்றோர்கள் பல இடங்களில் அவமானப்பட்டு நின்றதை நினைத்து வருந்துகிறார். சீக்கிய சமுதாயத்திலிருந்து எழும் எதிர்ப்புகள், தன் முதல் படத்தை சன்னி அறிவிக்கும் காட்சியுடன் நிறைவடைகிறது முதல் சீசன். அடுத்த சீசனில், திருமணம், இந்திய வருகை, பாலிவுட் என்ட்ரீ என, கரெஞ்சித் கவுரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய திருப்பங்கள் சுவராஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும், சன்னி லியோன் என்ற உடலின் சதைக்குப் பின்னால், கரெஞ்சித் கவுர் என்ற ஒரு மனிதி இருக்கிறாள் என்பதை நமக்கு உணர்த்துகிறது இந்த வெப் தொடர்.Trending Articles

Sponsored