’இயற்கை முடிவற்றது' - வெளியானது பேரன்பு படத்தின் இரண்டாவது டீசர்!Sponsoredஇயக்குநர் ராம்  இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி,  சாதனா நடித்துள்ள 'பேரன்பு' திரைப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது. சென்றவாரம் வெளியான முதல் டீசரில் குறிப்பிட்டது போலவே இந்த வாரம் 'அத்தியாயம் 2 - இயற்கை முடிவற்றது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் அத்தியாயத்தில் மம்முட்டி தன் மகள் பாப்பா எப்படி நடக்கிறாள் என்று கண்ணாடி முன் பார்க்கும் காட்சியின் தொடர்ச்சியாக இந்த டீசர் மம்முட்டி மற்றும் சாதனாவை கொண்டுள்ளது. மம்முட்டி தன் மகள் பாப்பாவிற்கு (சாதனா) கடற்கரையில் குறிகேட்பதுபோல் காட்சியமைத்து இருக்கிறார்கள். 'தங்க மீன்கள்' படத்தில் நடித்த சாதனா மாற்றுத் திறனாளி மாணவியாக நடித்துள்ளார். சென்றவாரம் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் திரையுலகின் அநேக பிரபலங்கள் சாதனாவை பாராட்டியதை தகும் என்ற அளவுக்கு இருக்கிறது இந்த டீசர். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கேரளாவை சேர்ந்த திருநங்கை அஞ்சலி அமீர் நடித்துள்ளார். அடுத்ததாகப் படத்தின் லிரிக் வீடியோ வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored