பாரதிராஜா முதன்முறையாக இயக்கி நடிக்கும் 'ஓம்'Sponsoredஇயக்குநர் பாரதிராஜா சிறு  இடைவெளிக்குப் பிறகு இயக்கிருக்கும் படம் 'ஓம்'. இப்படத்தின் புதிய டீசர் அமீர், ராம், வெற்றிமாறன் உள்ளிட்ட பல இயக்குநர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. 

'பாண்டிய நாடு', 'படைவீரன்', 'குரங்கு பொம்மை' படங்களைத் தொடர்ந்து 'ஓம்' படத்தில் நடித்ததிருக்கிறார் பாரதிராஜா. த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் இவருடன் புதுமுகம் ராசி நக்ஷத்ரா, ஜோ மல்லூரி, மௌனிகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரகுனந்தன் இசையில் அமரர் நா.முத்துக்குமார், கவிஞர் வைரமுத்து, மதன் கார்க்கி ஆகியோர்  பாடல்களை எழுதியுள்ளனர்.  'ஓம் என்றால் `ஓல்டு மேன்’ என அர்த்தப்படும்படி அமைந்திருக்கிறது  படத்தின் டைட்டில். பாரதிராஜாவின் 'சிகப்பு ரோஜாக்கள்' போல் ஒரு சைக்கோ த்ரில்லரராக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிகழ்வில் பல பேசிய  இயக்குநர் வெற்றிமாறன், "பாரதிராஜா ரொம்ப ஸ்டைலிஷான ஒரு நடிகரா தன்னை காட்டியிருக்கிறார். அவரை வைத்து படம் பண்ண வேண்டும். எனக்கு பாலுமகேந்திரா என்னவாக இருந்தாரோ அந்த இடத்தை நிரப்பியிருக்கிறார்" என்றார்.

Sponsored


Sponsored


இயக்குநர் ராம் பேசுகையில் ``கலை என்பது  மூப்பை குறைக்கும். 77 வயதில் பாரதிராஜா இரண்டு மைல் நடக்கிறார். ஓல்டு மேனுக்கு  தமிழில் பேரிளம் ஆண் என்பதுதான் சரியான வார்த்தை. அந்த வார்த்தைக்கு சரியாக பொருந்துபவர் பாரதிராஜா" என்றார்  

தனது 40 வருட இயக்குநர் பயணத்தில் பாரதிராஜா  இயக்கி நடித்திருக்கும் முதல் படம் 'ஓம்' என்பது குறிப்பிடத்தக்கதுTrending Articles

Sponsored