சூர்யாவின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்த செல்வராகவன் #HBDSURYAநடிகர் சூர்யாவின் 43-வது பிறந்த நாளை முன்னிட்டு செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'என் ஜி கே' படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை வெளிடயிட்டுள்ளனர்.    

Sponsored


இந்த போஸ்டரில் 'என் ஜி கே' என்ற எழுத்துகளின் விரிவாக்கத்தையும் குறிப்பிட்டிருந்தனர். இயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாளையொட்டி ரிலீசான ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டின்போது நாம் சொன்ன 'நந்த கோபாலன் குமரன்' தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே லீக்கான படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களைப் பார்க்கும்போது சூர்யா இப்படத்தில் ஒரு அரசியல் சார்ந்த் களத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகின்றனர். சூர்யாவுடன் செல்வராகவன் இணையும் முதல் படம் இது என்பதால், இப்படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பும் பரபரப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored