`நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான்; ஆனால் 24 மணி நேரமும் இதுதான் நடக்கிறது'- பாடகி ரம்யா வேதனை!Sponsored`பிக் பாஸ்’ வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்ட ரம்யா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


 

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த இரண்டு வாரமாக ட்விஸ்ட்டுகள் வைத்து மக்களைக் குழப்பி வருகிறார்  `பிக் பாஸ்’. கடந்த வாரம் நித்யா வெளியேற்றப்பட்டதற்கு இணையத்தில் எதிர்ப்புகள் எழுந்தன. அதேபோன்று, இந்த வாரம் ரம்யா வெளியேற்றப்பட்டதற்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், தான் வெளியேற்றப்பட்டதற்கு யாரும் ஃபீல் பண்ண வேண்டாம். என்னால் அந்த வீட்டில் இதற்கு மேல் இருக்க முடியாது’ என ரம்யா தனக்கு ஆதரவளித்த ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

Sponsored


இன்று தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், `இந்த வீடியோ உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதற்காகவே. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு, நீங்கள் எனக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். பிக் பாஸ் வீட்டுக்குள் நான் நானாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். ஒரு சில இடங்களில் கோபமாக நடந்துகொண்டது உண்மைதான். ஆனால், என் கோபத்தில் நியாயம் இருந்தது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றியதற்கு, பலர் வருத்தம் தெரிவித்து எனக்கு மெஸேஜ் அனுப்பியிருந்தீர்கள். ஆனால், வெளியில் வந்தது எனக்கு மகிழ்ச்சியே. என்னால் இதற்கு மேல் அந்த வீட்டில் இருக்க முடியாது. பொறாமை, போட்டி என வீட்டுக்குள் எப்போதுமே சண்டைதான். நீங்கள் பார்ப்பது ஒரு மணி நேரம்தான். ஆனால், 24 மணி நேரமும் சண்டைதான். கண்டிப்பாக என்னால் அங்கு இதற்கு மேல் இருக்க முடியாது. எனவே, நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தது சந்தோஷம்தான். உங்கள் ஆதரவு எனக்கு எப்போதும் வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored