``தயாரிப்பாளர் ஷிபுதான் என்னை மாட்டிவிட்டுட்டாரு" - பாடகி கீர்த்தி சுரேஷ் கலகலSponsoredவிக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி ஆகியோர் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கியுள்ள திரைப்படம் சாமி ஸ்கொயர். 2003 -ல் வெளிவந்த சாமி படத்தின் தொடர்ச்சியாக இப்படம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் வரும் கோட்டா ஶ்ரீநிவாசராவ்  கதாபாத்திரத்தின் மகனாக பாபி சிம்ஹா  நடித்திருக்கிறார். 

தேவி ஶ்ரீ பிராசாத் இசையில் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது.  இப்படத்தில் 'புது மெட்ரோ ரயில்' என்ற பாடலை விக்ரமுடன் இணைந்து பாடியுள்ளார்  கீர்த்தி சுரேஷ். இதுகுறித்து பேசுகையில் ``தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் நான் இதுவரை நடித்த 'நேனு லோக்கல்', 'நேனு ஷைலஜா' ஆகிய  இரண்டு தெலுங்கு படங்களும் ஹிட் அடித்தன. அதேபோல் அவர் தமிழில் எனக்கு இசையமைக்கும் இப்படமும் ஹிட் ஆகணும். நான் எங்கேயோ பாடுற வீடியோவை பார்த்துட்டு தயாரிப்பாளர் ஷிபுதான் என்னை மாட்டிவிட்டுட்டாரு" என்றார்.

Sponsored


Sponsored


தேவி ஶ்ரீ பிரசாத் பேசும்போது, ``விக்ரம் சார் வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை ஒரு பாட்டுப் பாட வைக்கணும்னு முடிவு பன்ணிட்டோம். இவரோட பாட ஒரு ஸ்பெஷல் குரல் ஒண்ணு கிடச்சா நல்லா இருக்கம்ணு தோணுச்சு. அப்போ தயாரிப்பாளர் ஷிபு ஒரு வீடியோ படத்தோட சக்ஸஸ் மீட்ல கீர்த்தி பாடுற வீடியோ ஒண்ணக் காட்டி இவங்கள பாட வைக்கச் சொன்னாரு. அப்படித்தான் இந்து 'புது மெட்ரோ ரயில்' பாட்டு ரெக்கார்டு ஆச்சு. கீர்த்தி தொடர்ந்து அவரது படங்களில் பாடணும்" என்றார்          Trending Articles

Sponsored