``மோகன்லாலுக்கு எதிராக நான் எந்த வழக்கும் பதியவில்லை" - நடிகர் பிரகாஷ்ராஜ்!நடிகை கடத்தல் வழக்கி சிக்கிய திலீப்பை மீண்டும் `அம்மா' சங்கத்தில் சேர்த்துக்கொண்டதற்காக நடிகர் மோகன்லாலின் மீது பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் முன் வைக்கப்பட்டன. இந்நிலையில், நடக்கவிருக்கும் மாநிலத் திரைப்பட விருது விழாவில், நடிகர் மோகன்லால் கலந்துகொள்ளக்கூடாது என பல்வேறு தரப்பினர் வழக்கு பதிந்திருந்தனர். 

Sponsored


இதைத் தொடர்ந்து, நடிகர் பிரகாஷ்ராஜும் மோகன்லாலுக்கு எதிராக வழக்கு பதிந்ததாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், வெளியான செய்தி மொத்தமும் வதந்தி என்று நடிகர் பிரகாஷ்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு வருடமும் கேரள அரசு, மாநில திரைப்பட விருதுகள் வழங்கிக்கொண்டு வருகிறது. இந்த வருடத்துக்கான விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி நடக்கவிருக்கிறது. விழாவில் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவரான மோகன்லால் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விழாவில் மோகன்லால் கலந்துகொள்ளக்கூடாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கேரள அரசிடம் கேட்டுக்கொண்டார் என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டு வந்தது. 

Sponsored


இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், ``மோகன்லாலுக்கு எதிராக நான் எந்தக் கையொப்பமும் போடவில்லை. விழாவில் அவர் கலந்துகொள்ள நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார், நடிகர் பிரகாஷ்ராஜ். Trending Articles

Sponsored