விவசாயத்துக்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கிய சூர்யா!Sponsoredபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 13-ம் தேதி வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விவசாயம் பற்றியும் கூட்டு குடும்ப வாழ்க்கை பற்றியும் மிக நேர்த்தியாகக் கூறியுள்ள இப்படத்தைத் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் நல்ல வசூலைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் வெற்றிவிழாவில் 'நெல்' ஜெயராமன் உள்ளிட்ட ஐந்து விவசாயிகளைக் கெளரவித்து அவர்களுக்கு 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் சார்பாகத் தலா 2 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது. மேலும், விவசாயத்தைப் பாதுகாத்து அதனை மேம்படுத்த  2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். அந்த விவசாயப் பணிகள் 'அகரம் ஃபவுன்டேஷன்' மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அந்தப் பணம் எப்படி எல்லாம் பயனுறப்போகிறது என்பது பற்றி சில வாரங்களில் அறிவிப்பு வெளியாகும் என்றும் சூர்யா தெரிவித்தார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored