ஆந்திராவைக் கலக்கும் 'அர்ஜுன் ரெட்டி' நாயகனின் 'கீதா கோவிந்தம்' டீசர்Sponsoredஆந்திராவை கலக்கி வருகிறது 'அர்ஜுன் ரெட்டி' நாயகனின் 'கீதா கோவிந்தம்' திரைப்படத்தில் டீசர்

 `அர்ஜுன் ரெட்டி'யில்  கதாநாயகனாக நடித்த விஜய் தேவரக்கொண்டாவுக்கு அடுத்த படமான `டாக்ஸிவாலா' வெளியீடு தாமதமாகி வரும் நிலையில் தமிழில் `நோட்டா',  தெலுங்கில் `கீதா கோவிந்தம்' படங்களில் நடித்து வருகிறார். கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியாகக் கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியிட்ட சிறிது நேரத்தில் யூடியூபில் டிரெண்டிங் ஆனது. ரசிகர்களை ரவுடி என்று அழைக்கும் விஜய் தேவரக்கொண்டா ``நான் டீசென்ட்டாக மாறிட்டேன்" என்று தெலுங்கில் டீசருடன் டிவீட் பதிவிட்டிருந்தார். கல்லூரி லெக்சரரான கீதாவை (ராஷ்மிகா) காதலிக்கும் மாணவன் கோவிந்தாக (தேவரக்கொண்டா) நடித்திருக்கிறார். இந்த டீசர் படுவேகமாக அனைவரையும் கவர்ந்து யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.    

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored