பாதசாரிகளான பள்ளி மாணவர்களுக்கு உதவிய வரலட்சுமி!சர்கார், சண்டக்கோழி 2, கன்னி ராசி, நீயா 2 எனப் பல படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார். விஷாலுடன் தான் நடித்து வரும் சண்டக்கோழி 2 படப்பிடிப்புக்காக காரைக்குடி, திண்டுக்கல் என கிராமத்து மணம்பொருந்திய இடங்களில் ஷூட் செய்து வருகிறார்கள் படக்குழுவினர்கள். வரலட்சுமி தங்கியிருக்கும் விடுதியிலிருந்து படப்பிடிப்புக்குச் செல்லும் வழியில் சாலையோரமாக பள்ளிக்கு நடந்து சென்ற கிராமத்து மாணவிகளை தன் காரில் ஏற்றிக்கொண்டு அவர்களை பள்ளியில் ட்ராப் செய்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக அவர்களுடன் புகைப்படம் எடுத்து, அதை சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில், ``இந்தக் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்குச் செல்கிறார்கள். இன்று அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவது என முடிவெடுக்கப்பட்டது. காரிலிருந்து இறங்கும்போது அவர்களது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored