`சாதிக்கப் பிறந்த சாக்ரடீஸே' - தினேஷின் `அண்ணனுக்கு ஜே' ட்ரெய்லர் ரீலிஸ்!Sponsoredஅட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள `அண்ணனுக்கு ஜே' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனின் அசிஸ்டன்டாக இருந்த ராஜ்குமார் தனது முதல்படமாக `அண்ணனுக்கு ஜே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், மகிமா நம்பியார் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்துள்ளனர். ராதாரவி, மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, வெற்றிமாறனே இப்படத்தைத் தயாரித்துள்ளார். மேலும், படத்துக்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். லோக்கல் அரசியலை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகிய நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

Sponsored


இதில்,  பனை மரம் ஏறி சம்பாதிக்கும் பையனாக வரும் தினேஷ் அரசியலில் சாதிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தினேஷ் - மகிமா நம்பியார் இடையேயான காதல் காட்சிகள் என `அண்ணனுக்கு ஜே' ட்ரெய்லர் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. மேலும், சாதிக்கப் பிறந்த சாக்ரடீஸ், தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு நெல்சன் மண்டேலாவைப்போல, தென் இந்தியாவுக்கு ஒரு மட்ட சேகர் என்பது போன்ற வசனங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

Sponsored
Trending Articles

Sponsored