`உங்க தியேட்டர்ல பாம் இருக்கு; எல்லாரையும் வெளியே அனுப்புங்க!’ - `தமிழ்ப் படம் 2’ டெலிட்டட் காட்சிகள்



Sponsored



`தமிழ்ப் படம்-2' படக்குழு திரையில் வெளிவராத காட்சிகள் சிலவற்றை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


 

சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ்ப் படம்-2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் முழுக்க முழுக்க மற்ற திரைப்படங்களில் வரும் காட்சிகளைக் கிண்டல் செய்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிவாவுடன் சதீஷ், கலைராணி, ஐஸ்வர்யா மேனன், சந்தான பாரதி, ஆர்.சுந்தரராஜன், மனோபாலா, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

2010-ம் ஆண்டு வெளியான `தமிழ்ப் படம்’ அளவுக்கு இத்திரைப்படம் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், தமிழ்ப் படம்-2 படத்தில் வெளியாகாத சில டெலிடட் காட்சிகளைப் படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த டெலிடட் சீன்களின் தொகுப்பில், நகைச்சுவையும் கலாய்ப்பும் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளன. 

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored