நான் சஞ்சய்தத்தை சந்தித்ததில்லை..! 'சஞ்சு' படத்துக்கு எதிராக போர்கொடி தூக்கும் கேங்க்ஸ்டர்Sponsoredரன்பீர் கபூர் நடித்து வெளிவந்துள்ள 'சஞ்சு' படத்தில் தன்னை தவறாக சித்திரித்துள்ளதாக, கேங்க்ஸ்டர் அபு சலீம் அப்படக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இந்தி சினிமாவில் பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்ட பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு, சஞ்சு என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது. ராஜ் குமார்ஹிரானி இயக்கியுள்ள இப்படத்தில், சஞ்சய்தத்தாக ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இந்தப் படத்தில், சஞ்சய் தத், போதை மருந்துக்கு அடிமையாக இருந்தது, வெடிகுண்டு வழக்கில் சிறைக்குச் சென்றது, துப்பாக்கி வைத்திருந்து சிறைக்குச் சென்றது உள்ளிட்ட சம்பவங்கள் படமாக்கப்பட்டிருந்தன.

Sponsored


Sponsored


இந்த நிலையில், 1993-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் கேங்க்ஸ்டர் அபு சலீம், சஞ்சு படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், 'சஞ்சு படத்தில் காட்சிப்படுத்தியுள்ளபடி, சஞ்சய் தத்துக்கு அபு சலீம் ஆயுதங்கள் அளிக்கவில்லை. அபு சலீம் ஒரு போதும் சஞ்சய் தத்தை சந்தித்ததில்லை. சஞ்சய் தத்துக்கு அபு சலீம் ஆயுதம் கொடுத்ததாக உள்ள காட்சியை 15 நாள்களுக்குள் படத்திலிருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால்,அவதூறு வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1993-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அபு சலீம் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் இருந்துவருகிறார். Trending Articles

Sponsored