லுங்கி டான்ஸ் ஆடி அசத்திய ரிசார்ட் ஊழியர்கள்!- உட்கார்ந்து கைத்தட்டி ரசித்த ரஜினிSponsoredரஜினிகாந்த் முன்னிலையில் லுங்கி டான்ஸ் ஆடி அசத்திய ரிசார்ட் ஊழியர்களின் வீடியோ, இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது. 


 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பெயர் வைக்கப்படாத படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, டார்ஜிலிங்கில் நடந்து முடிந்தது. தற்போது, உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. கடந்த 16-ம் தேதி டெல்லி சென்ற ரஜினி, அங்கிருந்து 17-ம் தேதி டேராடூன் சென்றார்.  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சுமார் ஒரு மாத காலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டேராடூனில் ரஜினி தங்கியிருக்கும் ரிசார்ட்டின் ஊழியர்கள் அனைவரும் இணைந்து, ரஜினிக்காக  டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் செய்து அசத்தியுள்ளனர். லுங்கி டான்ஸ் பாடலுக்கு ரிசார்ட் ஊழியர்கள் உற்சாகமாக ஆடியதில் மகிழ்ச்சியடைந்த ரஜினி, அவர்களை கட்டித்தழுவி பாராட்டினார். இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகிவருகிறது. 

Sponsored
Trending Articles

Sponsored