`குடிசையோ, குப்பமேடோ; இது நம்ம ஊரு!’ - `வடசென்னை’ டீசரில் தெறிக்கவிடும் தனுஷ்Sponsoredவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

பொல்லாதவன், ஆடுகளம் வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்துள்ள திரைப்படம் வடசென்னை. அந்தப் படத்துக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்துக்கு ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்தப் படத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Sponsored


இந்தப் படத்தில் அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிற்து.  ``ஒருத்தன் செத்தா முடியுற சண்டையில்ல, ஜெயிக்குறமோ, தோக்குறமோ முதல்ல சண்ட செய்யனும்,  குடிசையோ, குப்பமேடோ நம்மதான் இத பாத்துக்கனும். நாம இதுக்காக சண்டை செய்யனும்'’ என்று தனுஷின் வசனங்கள் மட்டும் இந்த டீசரில் தனியாக தெறிக்கின்றன. தனுஷின் பிறந்தநாளை ஒட்டி இந்த டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தனுஷ், பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தனது கனவுப் படமாக வடசென்னையைக் குறிப்பிட்டிருக்கிறார்.
 

Sponsored
Trending Articles

Sponsored