நடிகர் திலீப் குறித்து பொதுவெளியில் பேசத் தடை? - மீண்டும் சர்ச்சையில் மலையாள நடிகர் சங்கம்



நடிகர் திலீப் விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என மலையாள நடிகர்களுக்கு அம்மா சங்கம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Sponsored


மலையாளத் திரையுலகில் நடிகர் திலீப் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவராக மோகன்லால் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் கூட்டத்திலேயே, பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரீமா கலிங்கல் உள்ளிட்ட 4 மலையாள நடிகைகள் 'அம்மா' சங்கத்திலிருந்து வெளியேறினர். இந்த விவகாரத்தில், நாளொரு பேட்டி, கருத்து என வெளிவந்துகொண்டிருந்த சர்ச்சைக்குக் காரணமான திலீப்பே, ``நான் நிரபராதி என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிரூபிக்கும் வரை அம்மாவில் இணைந்திருக்க விரும்பவில்லை" எனக் கூறினார். பின்னர் இந்த விவகாரத்தில் நடிகர் மோகன்லால் மன்னிப்புக் கேட்டார். இதனால் ஓரளவுக்கு சர்ச்சைகள் ஓய்ந்தன. 

Sponsored


இந்நிலையில், மலையாள நடிகர் சங்கமான அம்மா தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ``நடிகர் திலீப் விவகாரம் உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் பொதுவெளியில் நடிகர், நடிகைகள் கருத்து தெரிவிக்கக்கூடாது. பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். எதுவானாலும் நடிகர் சங்கத்திலேயே தெரிவிக்க வேண்டும். பொதுவெளியில் கருத்துகள் கூறி சங்கத்தை இழிவுபடுத்தக்கூடாது" எனக் கூறியுள்ளது. இந்தத் தகவல் தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அம்மா சங்கத்தின் கூட்டத்தை ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Sponsored




Trending Articles

Sponsored