`நரகாசூரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!'துருவங்கள் பதினாறு' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் படம், 'நரகாசூரன்'. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, மலையாள நடிகர் இந்திரஜித், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைத்து டெக்னீஷியன்களுமே 'துருவங்கள் பதினாறு' படத்தில் பணிபுரிந்தவர்கள்தாம்.

Sponsored


இந்தப் படத்தின் டீஸர் வெளியானதைத்  தொடர்ந்து, படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. கெளதம் மேனன் - கார்த்திக் நரேன் இடையேயான சில மனஸ்தாபத்துக்குப் பிறகு, படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பியுள்ளது படக்குழு.  யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம், ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு. அதை, கார்த்திக் நரேன் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored