எனக்கு `விசுவாசம்' இருக்கா..! - அஜித் ரசிகர்களை குஷிப்படுத்திய விவேக் ஓபராய்Sponsoredநடிகர் அஜித் சினிமாவுக்கு வந்து 26 ஆண்டுகள் முடிவடையுள்ளதை அடுத்து அவருக்கு பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 26 வருடங்கள் ஆகிவிட்டன. அமராவதி படத்தில் அறிமுகமான அஜித், அப்படத்திற்காக அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தினம் ஆகஸ்ட் 3ம் தேதி 1992 ஆண்டு. இதனை கணக்கில் வைத்தே அவர் சினிமாவுக்கு வந்த ஆண்டுகள் கணக்கிடப்படுகிறது. அதன்படி, இன்றுடன் அவர் சினிமாவுக்கு 26 ஆண்டுகள் ஆகிறது. இதனை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவரது ரசிகர்கள், நாளை அஜித்தின் 26 வருட சாதனையை ட்ரெண்ட் ஆக்குவதற்கு ரெடியாகி வருகிறார்கள். இதேபோல் பல சினிமா பிரபலங்களும் அஜித்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

Sponsored


அந்தவகையில் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்தவரும், பிரபல பாலிவுட் நடிகருமான விவேக் ஓபராய் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``என்னுடைய நண்பன் சினிமாவுக்கு வந்து 26  ஆண்டுகள் ஆகிவிட்டது. லெஜண்ட்டாக மிகசிறந்த வளர்ச்சி. லவ் யூ பிரதர். இன்னும் பல படங்களில் நடித்து எங்களை மகிழ்விப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று கூறியவர் `எனக்கு விசுவாசம் இருக்கா' என்றும் பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

Sponsored
Trending Articles

Sponsored