ஜி.வி.பிரகாஷ், வசந்தபாலன் இணையும் 'ஜெயில்’Sponsoredஜி.வி.பிரகாஷ் குமார், வசந்தபாலன் இணையும் படத்துக்கு 'ஜெயில்' என்று பெயரிட்டுள்ளனர். 

ஆதிக் ரவிச்சந்திரனுடன் இயக்கும் '3D' படம், '4ஜி', 'ஐங்கரன்', 'அடங்காதே', 'குப்பத்துராஜா', '100% காதல்', 'சர்வம் தாளமயம்' ஆகிய  படங்களைக் கைவசம் வைத்திருக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் தனது அடுத்த படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளார்.   'வெயில்', 'அங்காடித் தெரு', 'காவியத் தலைவன்' ஆகிய படங்களை  இயக்கிய வசந்தபாலன், இப்படத்தை இயக்குகிறார்.

Sponsored


ஆர்யா பங்குபெற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ தொலைக்காட்சி நிகழ்ச்சிமூலம் புகழ்பெற்ற அபர்ணதி , ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். 'இரும்புத்திரை' படத்தை வெளியிட்ட கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், இப்படத்தை  தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் இப்படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராதிகா ,'பள்ளிப் பருவத்திலே’ படத்தில் அறிமுகமான நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 

Sponsored
Trending Articles

Sponsored