தெலுங்கு பிக் பாஸ் வீட்டுக்குள் திடீர் விசிட்! - போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த கமல்Sponsoredஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்களுக்கு நடிகர் கமல் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 


 

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் கமல், 'விஸ்வரூபம்' திரைப்பட புரமோஷன் வேலைகளில்  படுபிஸியாக இருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில், பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில், 'விஸ்வரூபம் 2 'திரைப்படம், வரும் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.  தமிழ்,  இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் கமல் அதிக கவனம் செலுத்திவருகிறார். படக்குழுவின் முக்கிய டார்கெட், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான். 

Sponsored


இசையமைப்பாளர் ஜிப்ரான், கமல்,  பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, படத்தின் பாடல்களை வெளியிட்டுவருகின்றனர். விஸ்வரூபம்-2 படத்தின்  இந்தி பதிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், கமல் கடந்த சில தினங்களுக்கு முன், நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ‘தஸ் கா தம்’ என்ற  இந்தி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.  பூஜா குமார், ஆன்டிரியா, ஜிப்ரான் ஆகியோர் கடந்த வாரம் தமிழ் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்கள் மத்தியில் படத்தின் பாடல்களைப் பாடி அசத்தினர். இப்படியாக விஸ்வரூபம் -2 படத்தின் புரமோஷன் பணிகளைப் படக்குழு மேற்கொண்டுவருகிறது. 

 இந்தி, தமிழைத் தொடர்ந்து, விஸ்வரூபம்-2 படத்தின் தெலுங்கு பதிப்பை விளம்பரப்படுத்தும் விதமாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் கமல். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை  நடிகர் நானி தொகுத்து வழங்கிவருகிறார். இன்று வெளியான அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில், பிக் பாஸ் வீட்டுக்குள் கமல் சர்ப்ரைஸாக நுழைய, ஒட்டுமொத்த வீடும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறது. கமலைப் பார்த்ததும், ஒரு சில போட்டியாளர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் அவர் கலந்துரையாடுவார் என்று தெரிகிறது. 

Sponsored
Trending Articles

Sponsored