``கருணாநிதி பற்றி மீம் வரும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு" - 'பூமராங்' இசை வெளியீட்டு விழாவில் சதீஷ்Sponsoredஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியிருக்கும் 'பூமராங்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு 'அர்ஜுன் ரெட்டி' படத்துக்கு இசையமைத்த ரதன் இசையமைத்துள்ளார்.

அவ்விழாவில் பேசிய சதீஷ், ``இப்போ இருக்கிற விவசாய பிரச்னையையும் தண்ணி பிரச்னையும் பத்தி படத்துல பேசியிருக்கார் கண்ணன் சார். தண்ணி பிரச்னை இப்போ பெரிய பிரச்னையா இருக்கு. ஷவர்ல குளிக்கிறதை நிறுத்திட்டு பக்கெட்ல தண்ணி பிடிச்சு குளிச்சா நிறைய சேமிக்கலாம். ஒரு சமூக பிரச்னைகளுக்கு எதிரா மீம் போட்டுட்டாலே நம்ம கடமை முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிறோம். ஆனா, களத்துல இறங்கி செய்யணும். மீம் பத்தி பேசும்போது இன்னொரு விஷயத்தைப் பத்தியும் சொல்லி ஆகணும். அவ்வளவு பெரிய தலைவர் ஹாஸ்பிட்டல்ல இருக்கார். அவரைப் பத்தி மீம் வரும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் வயசுக்கும் அவர் இருந்த பொறுப்புக்கும் நாம மரியாதை கொடுக்கணும். அப்படி ஒரு மீம் வந்தாலும் யாரும் ஷேர் பண்ணாதீங்க" என்றார். மேலும், சுஹாசினி, சமுத்திரக்கனி, போஃப்டா தனஞ்செயன், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored