``இன்னைக்கு இந்திய ட்ரெண்டிங்கே நாம தான்” கலக்கும் சிவகார்த்திகேயனின் சீமராஜா டீசர்!



`வருத்தப்படாத வாலிபர் சங்கம்', `ரஜினி முருகன்' என வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன்  மீண்டும் நடிக்கும் படம் சீமராஜா. 

Sponsored


இந்தப் படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தா, சிலம்பம் ஆசிரியராக நடித்திருக்கிறார். படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் சிம்ரன் நடித்திருக்கிறார். சூரி, யோகிபாபு, மனோபாலா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜா படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.  

Sponsored


கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதியோடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் `வரேன் வரேன் சீமராஜா' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் இன்று மதுரையில் பிரமாண்டமான விழாவில் வெளியிடப்பட்டது. செப்டம்பர் மாதம் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்தப்படம் திரைக்கு வரவுள்ளது.

Sponsored




Trending Articles

Sponsored