வெள்ளித்திரைக்கு வரும் சானியா மிர்சா வாழ்க்கை!Sponsoredஇந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை தற்போதுள்ள காலகட்டங்களில் அனைத்துத் துறைகளிலும் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது ட்ரண்டாகி வருகிறது. முன்னதாக கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு எம்.எஸ் தோனி என்ற பெயரிலேயே எடுக்கப்பட்டது, நடிகை சாவித்திரியின் கதையை நடிகையர் திலகம், மகாநடி போன்ற பெயர்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது. அதேபோன்று நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை சஞ்சு என்ற பெயரில் பாலிவுட்டில் வெளியானது. ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றுள்ளன என்றே கூற வேண்டும். அதிலும் விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்த பலரின் வாழ்க்கையும் படமாக உருவாகி பெரிய வெற்றி பெற்றது. 

Sponsored


இவர்களின் வரிசையில் தற்போது இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளது. சானியா மிர்சா கடந்த 2003-ம் ஆண்டு இந்திய பெடரேசன் கோப்பைக் குழுவில் சேர்ந்து அனைத்து மூன்று ஒற்றையர்கள் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார். 2003-ம் ஆண்டில் நடந்த விம்பிள்டன் மகளிர் இரட்டையர் விளையாட்டில் ரஷ்யாவைச் சேர்ந்த அலிசா க்லேய்போனவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிப் பட்டம் பெற்றார். அதையடுத்து விளையாடிய பல போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று சாதனைப் படைத்தார். பின்னர் இவருக்கு உலக அளவில் பெரும் அங்கீகாரம் கிடைத்தது. 10 வருடங்களுக்கு முன்னர் டென்னிஸ் என்றாலே சானியா மிர்சா ஞாபகம்தான் பலருக்கும் வரும் என்ற அளவுக்கு வெற்றியின் உச்சத்தில் இருந்தார் மிர்சா. பிறகு கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்  சோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இதன் பின்னர் விளையாட்டில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த சானியா அவ்வப்போது சில தொடர்களில் மட்டும் விளையாடி வந்தார். தற்போது அவர் தாய்மை அடைந்துள்ளதால் முற்றிலும் விளையாட்டை விட்டு ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

Sponsored


இந்நிலையில், இவரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க முன் வந்துள்ளார் பாலிவுட் படத் தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ருவாலா. சானியா மிர்சா படத்தின் கதை, இயக்குநர், நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் யார் சானியா மிர்சா கதாபாத்திரம் ஏற்க உள்ளார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored