‘பத்மாவத் படத்தில் எனக்கான கில்ஜி கிடைக்கவில்லை’ - கலகலத்த ஐஸ்வர்யா ராய்Sponsoredபத்மாவத் படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. ஆனால், எனக்கான கில்ஜி கிடைக்கவில்லை என நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். 

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகிய இருவரும் ஹும் தில் டி சூகே சனம், குஜாரிஷ் போன்ற படங்களில் இணைந்து செயல்பட்டுள்ளனர். இந்நிலையில் ,உங்களுக்கு சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என நடிகை ஐய்வர்யா ராயிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஐஸ்வர்யா, “அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மறுப்பு சொல்லவே மாட்டேன். முன்னதாகச் சஞ்சய் இயக்கிய `பாஜிராவ் மஸ்தானி’, `பத்மாவத்’ போன்ற படங்களில் நான் நடித்திருக்க வேண்டியது. ஆனால், அந்தப் படங்களில் எனக்கான கில்ஜி கிடைக்கவில்லை. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்” எனக் கூறியுள்ளார். 

Sponsored


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் நடித்து பெரிய ஹிட் ஆன படம் பாஜிராவ் மஸ்தானி.முன்னதாக இந்தப் படத்தில் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க வேண்டும் என இயக்குநர் விரும்பியுள்ளார். ஆனால், சில காரணங்களால் இந்தப் படத்தில் இவர்கள் இருவராலும் நடிக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. 

Sponsored
Trending Articles

Sponsored