‘கடினமாக உழைத்தவர்களுக்கு நன்றி’ - எதிர்பாராத இயற்கைப் பேரிடரில் சிக்கிய ஜாக்கி சான் நெகிழ்ச்சி!Sponsoredசீனாவில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாகத் தன் படக்குழுவுடன் சேற்று மணலில் சிக்கியதாக நடிகர் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். 

ஜாக்கி சான் என்ற பெயரை அறியாதவர்களே உலகில் இருக்க முடியாது. ஆக்‌ஷன் படங்களின் கிங், ஜாம்பவான் என்றே இவரைக் கூறலாம். சீனாவைச் சேர்ந்த இவர், தன் அசத்தலான ஆக்‌ஷன் மற்றும் காமெடி மூலம் உலக அளவில் பல கோடி ரசிகர்களைப்பெற்றவர். 

Sponsored


இவர், 'புராஜெக்ட் எக்ஸ்' (Project X) என்ற படத்தில் தற்போது நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு சீனாவின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், தனது படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் சேற்றில் தன் படக்குழுவினருடன் சிக்கியதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். 

Sponsored


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் , “ நாங்கள், எனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தோம். அப்போது யாரும் எதிர்பாராத விதமாகத் திடீரென வானிலை மாறியது. அதில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் சேற்றில் எங்கள் படக்குழு முழுமையாக சிக்கிக்கொண்டது. இதில், படக்குழு வாகனங்கள் முற்றிலும் மூழ்கிப்போயின. இதைக் கண்டு படக்குழுவினர் பெரும் அச்சமடையத் தொடங்கினர். அப்போது, அதிர்ஷ்டவசமாக வந்த சில மீட்பு லாரிகள், எங்கள் வாகனங்கள் மற்றும் படக்குழுவினரைப் பத்திரமாக மீட்டது. 

எங்களைக் காப்பாற்றியவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இவ்வளவு பெரிய இடரில் சிக்கிய படக்குழுவுக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சேற்று மண்ணில் சிக்கிய அனுபவத்திலிருந்து எங்கள் படக்குழு பெரும் பாடத்தைக் கற்றுக்கொண்டுள்ளது. இனி, வானிலை பற்றி மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருப்போம். படக்குழுவினரைக் காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்தோம். இதில், கடினமாக உழைத்த அனைவரும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.Trending Articles

Sponsored