சந்திரபாபு நாயுடு வேடத்தில் நடிக்கும் ராணா டகுபதி!தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவெடுத்து வருகிறது. தந்தை என்.டி.ஆர் கதாபாத்திரத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவே நடிக்கிறார். என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளார். இந்நிலையில், என்.டி.ஆரின் அரசியல் வாரிசென கருதப்பட்டுவரும் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்க 'பாகுபலி' ராணா டகுபதி நடிக்கவுள்ளார். 

Sponsored


Sponsored


டோலிவுட்டின் முன்னணி இயக்குநர் க்ரிஷ் இயக்குகிறார். இப்படத்தில், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான நடேந்தலா பாஸ்கர ராவ் வேடத்தில் நடிக்க பரேஷ் ராவல் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் சாவித்திரி மற்றும் நாகேஸ்வரராவ் கதாபாத்திரங்களில் நடிக்க 'நடிகையர் திலகம்' படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் நாக சைதன்யா ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Sponsored


சந்திரபாபு நாயுடு வேடத்தில் நடிப்பது பற்றி ராணா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்துப் பேசியது குறித்து தனது சமூக வளைதளத்தில், ``முதல்வர் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதுபெருமை அளிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.Trending Articles

Sponsored