கணவருக்காகப் பாடகியான நஸ்ரியா - யூ டியூபை கலக்கும் `புதியொரு பாதையில்' பாடல்! Sponsoredதன் கணவரின் படத்துக்காக நடிகை நஸ்ரியா நஸீம் பாடிய பாடல் ஒன்று, செம வைரலாகிவருகிறது. 

தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள நடிகை நஸ்ரியாவுக்கு, தொடக்கமே சிறப்பாக அமைந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் நடிப்பில் வெளியான `கூடே' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படத்தில் பிரித்வி ராஜ், பார்வதி உள்ளிட்டோர் நடித்திருந்தாலும், நஸ்ரியா ரீ-என்ட்ரிக்காகவே சிலர் படத்தைப் பார்த்துவருகின்றனர். மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றிலும் அவரைக் கொண்டாடிவருகின்றனர். இதற்கிடையே, தனது ரீ- என்ட்ரியில் புதிய அவதாரம் ஒன்றையும் நஸ்ரியா எடுத்துள்ளார். ஆம், தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் நஸ்ரியா. 

Sponsored


மலையாள சினிமாவின் பிரபல இயக்குநர் அமல் நீரத்துடன் மூன்றாவது முறையாக நஸ்ரியாவின் கணவர் ஃபஹத் பாசில் இணைகிறார். இப்படத்துக்கு, `வரதன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில்தான், நஸ்ரியா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் அவதாரத்துடன், தன் கணவருக்காக பாடகியாகவும் மாறியுள்ளார். படத்துக்கான பணிகள் நடந்துவரும் வேளையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள `புதியொரு பாதையில்' எனத் தொடங்கும் பாடலை நஸ்ரியா பாடியுள்ளார். சுசின் ஷியாம் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாட்டின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், யூ டியூபில் ஹிட்டடித்துவருகிறது.

Sponsored
Trending Articles

Sponsored