ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முறையாக கறுப்பின நடிகர்?Sponsoredஉலக சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பிரிட்டிஷ் உளவாளி கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில், முதன்முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இயான் ஃபிளமிங் எழுதிய நாவலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் - 007 கதாபாத்திரம், உலக ரசிகர்களிடையே வெகு பிரபலம். அவரது நாவலை அடிப்படையாகக்கொண்டு, கடந்த 1959-ம் ஆண்டு' டாக்டர்.நோ' படம் வெளியானது. அந்தப் படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் சீன் கானெரி நடித்திருந்தார். அவருக்குப் பின்னர், ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் காலத்துக்கு ஏற்றவாறு நடிகர்கள் நடித்துவருகிறார்கள். அந்த வரிசையில், கடைசியாக வெளியான 4 ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் டேனியல் கிரேக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வெளியாக இருக்கும் 25-வது படத்துடன் டேனியல் கிரேக் விடைபெறுகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படம் 2019-ம் ஆண்டு வெளியாகிறது. இதை 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தை இயக்கிய டேனி போயல் இயக்குகிறார்.

Sponsored


இந்த நிலையில், அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி சினிமா ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடிக்கும் நடிகர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்துக்கான ரேஸில், ஹாலிவுட் நடிகர்கள் பலரின் பெயர்கள் இருந்தாலும், அந்த ரேஸில் இட்ரிஸ் எல்பா முந்தி நிற்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேம்ஸ் பாண்ட் பிரான்சைஸின் தயாரிப்பாளர் பார்பரா ப்ரோக்கோலியின் கூற்று ஒன்றை அவர்கள் மேற்கோள்காட்டி இந்தச் செய்தியை வெளியிட்டுவருகிறார்கள். ``கறுப்பின நடிகர் ஒருவர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கச் சரியான நேரம் இதுவே’’ என்று அவர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவெஞ்சர்ஸ் மற்றும் தோர் வரிசையில் வெளியான படங்களில், முக்கியமான கதாபாத்திரத்தில் இட்ரிஸ் எல்பா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Sponsored
Trending Articles

Sponsored