`கபாலிக்கு விமானம்; நிவின் பாலிக்கு ரயில்'- ரசிகர்களை ஈர்த்த `காயங்குளம் கொச்சுண்ணி' விளம்பரம்!Sponsored`காயங்குளம் கொச்சுண்ணி' படத்தை புரொமோஷன் செய்யும்விதமாக, திருவனந்தபுரம் - கண்ணூர் வரை செல்லும் ஜனசதாப்தி ரயிலில் முழுவதும் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது, ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மலையாள நடிகர் நிவின் பாலி நயன்தாரா உடன் இணைந்து, `லவ் ஆக்‌ஷன் டிராமா' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிஸியாக நடந்துவருகிறது. இதற்கிடையே, இவர் நடித்த `காயங்குளம் கொச்சுண்ணி' படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. கேரளாவின் ராபின்ஹூட்டாக அறியப்பட்ட, `காயங்குளம் கொச்சுண்ணி'யின் வாழ்க்கை வரலாறைத் தழுவி இப்படம் தயாராகியுள்ளது. இதில், நிவின் பாலியுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், சன்னி வெய்னும் முக்கிய கேரக்டரில் நடிக்க, நிவினுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். ஜோதிகாவின் ரீ - என்ட்ரி படமான `36 வயதினிலே' படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். 

Sponsored


ஓணம் பண்டிகை வரவுள்ளதை ஒட்டி, வரும் 18-ம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி, படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்தும் விதமாக திருவனந்தபுரம் - கண்ணூர் வரை செல்லும் ஜனசதாப்தி ரயில் முழுவதும் `காயங்குளம் கொச்சுண்ணி' படத்தின் போஸ்டர்களும், கொடிகளும் ஒட்டப்பட்டுள்ளன. இதன் சேவையை நேற்று நிவின் பாலியும், சன்னி வெய்னும் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் தொடக்கி வைத்ததுடன், எர்ணாகுளம் வரை அந்த ரயிலில் பயணம்செய்தனர். இது, அவரது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. முன்னதாக, 'கபாலி' படம் ரிலீஸ் செய்யப்படும் முன்பு, விமானத்தில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Sponsored
Trending Articles

Sponsored